வருகிறது ‘வெண்ணிலா கபடி குழு’வின் 2ஆம் பாகம்!

வருகிறது ‘வெண்ணிலா கபடி குழு’வின் 2ஆம் பாகம்!

செய்திகள் 11-Mar-2015 10:22 AM IST Chandru கருத்துக்கள்

இயக்குனர் சுசீந்திரனின் அறிமுகப் படமான ‘வெண்ணிலா கபடி குழு’வின் 2ஆம் பாகத்தை உருவாக்குவதற்கான வேலைகள் தடபுடலாக நடைபெற்று வருகின்றன. ‘ஜீவா’ படத்தைத் தொடர்ந்து தற்போது விஷால், காஜல் அகர்வால் நடிக்கும் படத்தின் வேலைகளில் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கும் சுசீந்திரன், ஓய்வு நேரங்களில் ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் தொடர்ச்சிக்கான கதையை எழுதிக் கொண்டிருக்கிறாராம்.

தன்னிடம் அசோஷியேட் இயக்குனராகப் பணியாற்றிய சேகர் என்பவரை இப்படத்தின் மூலம் இயக்குனராக்கும் முடிவில் இருக்கிறாராம் சுசீந்திரன். ‘அன்னக்கொடி’, ‘ஜீவா’ படங்களில் நடித்த லக்ஷ்மண் நாராயண் இப்படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். லக்ஷ்மணின் அப்பாவாக நடிக்க பசுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

‘வெண்ணிலா கபடி குழு’விற்கு இசையமைத்த வி.செல்வகணேஷே இப்படத்திற்கும் இசைமைக்கவிருக்கிறார். ஒளிப்பதிவை ஆர்.மதி கவனிக்கிறார். ஏப்ரல் இறுதியில் இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கதாநாயகன் - உன் நெனப்பு பாடல் வீடியோ


;