விக்ரமுக்கு ஜோடியாகும் காஜல், ப்ரியா ஆனந்த்?

விக்ரமுக்கு ஜோடியாகும் காஜல், ப்ரியா ஆனந்த்?

செய்திகள் 11-Mar-2015 10:03 AM IST Chandru கருத்துக்கள்

‘ஐ’ படத்தைத் தொடர்ந்து தற்போது ‘10 எண்றதுக்குள்ள’ படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் விக்ரம். ‘கோலிசோடா’ விஜய் மில்டன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில், தனது அடுத்த படத்திற்கான வேலைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் விக்ரம். ‘அரிமா நம்பி’ இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம் சீயான்.

‘10 எண்றதுக்குள்ள’ படத்தில் விக்ரமுடன் முதல்முறையாக ஜோடி சேர்ந்த சமந்தாவைத் தொடர்ந்து, ஆனந்த் சங்கர் இயக்கும் படத்தின் மூலம் காஜல் அகர்வாலும் முதல்முறையாக விக்ரமுக்கு ஜோடியாகிறார். கூடவே ‘அரிமா நம்பி’ ஹீரோயின் ப்ரியா ஆன்ந்தும் 2வது ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம். இவரும் விக்ரமுடன் இணைவது இதுவே முதல்முறை. விக்ரம் கேரியரில் இப்படம் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டத்தில் ஒருத்தன் - நீ இன்றி பாடல் வீடியோ


;