‘நட்பதிகாரம் 79’ படத்திற்காக பாடிய தேவா!

‘நட்பதிகாரம் 79’ படத்திற்காக பாடிய தேவா!

செய்திகள் 10-Mar-2015 1:55 PM IST VRC கருத்துக்கள்

‘மஜ்னு’, ‘கண்ணெதிரே தோன்றினாள்’ ஆகிய படங்கள் உட்பட பல படங்களை இயக்கிய ரவிச்சந்திரன் தற்போது இயக்கி வரும் படம் ‘நட்பதிகாரம் 79’. இந்த படத்தில் ராஜ்பரத், அம்ஜத்கான் இருவரும் கதாநாயகர்களாக நடிக்க, கதாநாயகிகளாக ரேஷ்மி, தேஜஸ்வினி ஆகியோர் நடிக்கின்றனர். ‘ஜெயம் சினி என்டர்பிரைசஸ்’ நிறுவனம் சார்பில் டி.ரவிக்குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு தீபக் நிலம்பூர் இசை அமைக்கிறார். இப்படத்திற்காக தீபக் நிலம்பூர் இசையில் இசை அமைப்பாளர் தேவா ஒரு பாடலை பாடியுள்ளார்,. ‘சொல்லு சொல்லு சொல்லம்மா.. நீ உண்மை உண்மை சொல்லம்மா….’ என துவங்கும் அந்த பாடல் இன்று பதிவானது. ஏற்கெனவே தனது இசை அமைப்பிலும், வேறு சில இசை அமைப்பாளர்களின் இசையிலும் பல பாடல்கள் பாடியுள்ள தேவா, இப்படத்திற்காக பாடியுள்ள பாடல் ஹிட்டாகும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர் இப்படக் குழுவினர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கருப்பன் - அழகழகாக பாடல் வீடியோ


;