விரைவில் மிஷ்கின் படத்தில் இணையும் சரத்குமார்!

விரைவில் மிஷ்கின் படத்தில் இணையும் சரத்குமார்!

செய்திகள் 10-Mar-2015 12:52 PM IST VRC கருத்துக்கள்

‘சண்டமாருதம்’ படத்தை தொடர்து மிஷ்கின் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறர் சரத்குமார். மிஷ்கின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘பிசாசு’ படம் வெற்றிப் பெற்றது. இதனை தொடர்ந்து மிஷ்கின் இயக்கவிருக்கும் படம் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தன! ஆனால் அடுத்து மிஷ்கின் இயக்கும் படத்தில் சரத்குமார் ஹீரோவாக நடிப்பது உறுதியாகி விட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. இப்படத்தில் சரத்குமாருடன் நடிப்பதற்கான மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு இப்போது நடந்து வருகிறது. மிஷ்கின் தவிர ‘சண்டமாருதம்’ படத்தை இயக்கிய ஏ.வெங்கடேஷ் இயக்கும் படத்திலும் சரத்குமார் நடிக்க இருக்கிறார். ஆனால் இப்படம் எப்போது துவங்கும் என்பது இன்னும் முடிவாகவில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சவரக்கத்தி - டீசர் 2


;