‘மாரி’யில் எதிர்நீச்சல் போடும் தனுஷ், அனிருத்!

‘மாரி’யில் எதிர்நீச்சல் போடும் தனுஷ், அனிருத்!

செய்திகள் 10-Mar-2015 10:32 AM IST VRC கருத்துக்கள்

பாலாஜி மோகன் இயக்கி வரும் ‘மாரி’ படத்தின் ஷூட்டிங் தூத்துக்குடியில் நடந்து வருகிறது. தனுஷ், காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கும் இப்படத்திற்காக தூத்துக்குடியில் குத்துப் பாடல் ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையில் ‘தர… லோக்கல்…’ என துவங்கும் இந்தக் குத்துப் பாடலில் தனுஷுட்ன் அனிருத்தும் ஆடியிருக்கிறாராம்! ஏற்கெனவே தனுஷும் அனிருத்தும் இணைந்து ‘எதிர்நீச்சல்’ படத்தில் ஆடியிருந்தார்கள்! அந்தப் படத்தை தொடர்ந்து இப்போது ‘மாரி’யில் இருவரும் ஆட்டம் போட்டிருக்கிறார்கள்! தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸும், ‘மேஜிக் ஃபிரேம்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்பத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் முடிந்து விடுமாம். ‘வாயை மூடி பேசவும்’ படத்திற்குப் பிறகு பாலாஜி மோகன் இயக்கும் படம் இது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;