மணிரத்னம் படத்தில் நானியின் பங்களிப்பு!

மணிரத்னம் படத்தில் நானியின் பங்களிப்பு!

செய்திகள் 9-Mar-2015 12:40 PM IST VRC கருத்துக்கள்

மணிரத்னத்தின் ‘ஓகே கண்மணி’ படத்தின் ஷூட்டி முடிந்து இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. துல்கர் சல்மான், நித்யா மேனன் ஜோடியாக நடித்துள்ள இப்படம் தெலுங்கில் ‘ஓகே பங்காரம்’ என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது. தெலுங்கில் துல்கர் சல்மானுக்கு ‘நான் ஈ’ படப் புகழ் நானி குரல் கொடுக்கிறார். தமிழை பொறுத்தவரை துல்கர் சல்மானுக்கு தமிழ் நன்றாக தெரியும் என்பதால் அவரே டப்பிங் பேசுகிறார். துல்கர் சல்மான் நடித்த முதல் தமிழ் படமான ‘வாயை மூடி பேசவும்’ படத்திற்கு அவரே தான் குரல் கொடுத்திருந்தார்! இசைக்கு ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவுக்கு பி.சி.ஸ்ரீராம் என கூட்டணி அமைத்துள்ள இயக்குனர் மணிரத்னம் ‘ஓகே கண்மணி’யை அடுத்த மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;