மகளிர் தின ஸ்பெஷல்... ஜோதிகாவின் ‘36 வயதினிலே’

மகளிர் தின ஸ்பெஷல்... ஜோதிகாவின் ‘36 வயதினிலே’

செய்திகள் 9-Mar-2015 11:56 AM IST Chandru கருத்துக்கள்

‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ ரீமேக் மூலம் தமிழில் மீண்டும் களமிறங்கியிருக்கும் ஜோதிகாவின் படத்திற்கு ‘36 வயதினிலே’ என்று பெயர் வைத்துள்ளனர். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பிஸியாக நடைபெற்று வருகின்றன. மலையாளத்தில் இயக்கிய ரோஷன் ஆன்ட்ரூஸே தமிழிலும் இயக்கிவரும் இப்படத்தின் ஒளிப்பதிவை ஆர்.திவாகர் கவனிக்க, இசையமைக்கிறார் சந்தோஷ் நாராயணன். இணை தயாரிப்பு ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன்.

நேற்று (மார்ச் 8) உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ‘36 வயதினிலே’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. சிம்பிளாகவும், கிரியேட்டிவாகவும் இருந்த இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்திருப்பதால் சந்தோஷத்தில் இருக்கிறது சூர்யா டீம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மகளிர் மட்டும் - டிரைலர்


;