3 மாதங்களுக்கு முடங்குகிறதா தமிழ் சினிமா?

3 மாதங்களுக்கு முடங்குகிறதா தமிழ் சினிமா?

செய்திகள் 9-Mar-2015 11:40 AM IST Chandru கருத்துக்கள்

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று (8&3&2015) நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டம் முடிந்த பிறகு சங்கத் தலைவர் ‘கலைப்புலி’ எஸ்.தாணு பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்த விஷயங்கள்...

‘‘சினிமா தயாரிப்புத் தொழில் ஒவ்வொரு நாளும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. எனவே தயாரிப்பு செலவை எப்படி குறைப்பது என்பது உட்பட பல விஷயங்கள் தற்போது நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. திருட்டு விசிடி, இணையதளத்தில் படங்களை சட்டவிரோதமாக வெளியிடுவது, அதிகப்படியான தயாரிப்பு செலவு என தயாரிப்பாளர்கள் ஒவ்வொரு முறையும் பெரிய பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் தயாரிப்பு செலவை குறைப்பது பற்றியும், பட வெளியீடுகளை நெறிமுறைப் படுத்துவது பற்றியும் முக்கியமாக விவாதிகப்பட்டது. 6 மாத காலத்திற்கு தமிழ் படத்தயாரிப்பு, படப்பிடிப்பு, பட வெளியீடு உள்ளிட்ட ஒட்டுமொத்த பணிகளையும் நிறுத்தி வைக்க வேண்டும் என பல தயாரிப்பாளர்களும் கோரிக்கை வைத்தனர். சிலர் குறைந்தபட்சம் 3 மாத காலமாவது இதை செயல்படுத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர். இதுகுறித்து சினிமா தொடர்பான அனைத்து சங்கங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என தீர்மானம் நினைவேற்றியிருக்கிறோம்!’’ என்றார் தாணு.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலையில்லா பட்டதாரி 2 - டீசர்


;