‘புலி’ விஜய்யின் அதிரடி ஆக்ஷன் துவங்கியது...!

‘புலி’ விஜய்யின் அதிரடி ஆக்ஷன் துவங்கியது...!

செய்திகள் 9-Mar-2015 11:04 AM IST Chandru கருத்துக்கள்

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இரண்டு காலகட்டத்தில் நடக்கும் இந்த ஃபேன்டஸி படத்திற்காக இதுவரை பாடல், காமெடி, மற்ற காட்சிகள் என படமாக்கப்பட்டு வந்தன. தற்போது அதிரடி சண்டைக்காட்சிகளை படமாக்கத் துவங்கியுள்ளாராம் சிம்புதேவன்.

கடந்த சில நாட்களாக கேரளாவில் முகாமிட்டிருக்கும் ‘புலி’ டீம், அங்கே வாகாமன் நீர்வீழ்ச்சியில் படப்பிடிப்பை நடத்தி வந்தனர். தற்போது மஹோகனி எனும் இடத்திலுள்ள அடர்ந்த காடுகளில் அதிரடி சண்டைக்காட்சிகளை நடத்த இருக்கிறார்களாம். அனேகமாக மன்னர் யுகத்திற்கான சண்டைக்காட்சிகள் இங்கு படமாக்கப்படும் எனத் தெரிகிறது. இதுதவிர அதிரபல்லி என்ற இடத்திலும் படப்பிடிப்பை நடத்தவிருக்கிறார்களாம்.

இப்படத்திற்கு ‘சதுரங்க வேட்டை’ நட்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, இசையைமக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத். ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, ‘நான் ஈ’ சுதீப் ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;