ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா!

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா!

செய்திகள் 9-Mar-2015 10:25 AM IST Chandru கருத்துக்கள்

ரசிகர் மன்றங்கள் மூலம் ரசிகர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்து வரும் முன்னணி தமிழ் நாயகர்களில் சூர்யாவும், கார்த்தியும் முக்கியமானவர்கள். தங்களுக்கிருக்கும் ரசிகர் கூட்டங்களை கல்வி சேவைகளுக்கும், ரத்த தானம், அன்ன தானம் போன்ற அறப்பணிகளுக்கும் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் ரசிகர்களை நேரடியாக சந்தித்து உரையாடுவதுடன், அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் படப்பிடிப்பின்போதும் ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்வது, உரையாடுவது என எப்போதுமே ரசிகர்களுக்கு மிக நெருக்கத்தில் இருப்பதை சூர்யாவும், கார்த்தியும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

கார்த்தியைப் பொறுத்தவரை நேரடியாக மட்டுமின்றி ஃபேஸ்புக் மூலமும் தன்னுடைய கருத்துக்களை ரசிகர்களிடத்தில் பரிமாறிக் கொண்டிருக்கிறார். அதேபோல் நடிகர் சிவகுமாரும் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கம் மூலம் தன்னுடைய அனுபவங்களை ரசிகர்களிடத்தில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். இதுவரை எந்த சமூக வலைதளத்தின் மூலமும் ரசிகர்களிடம் தொடர்பு ஏற்படுத்தாமல் இருந்துவந்த சூர்யா, நேற்று ட்விட்டரில் இணைந்து தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். சனிக்கிழமையே சூர்யா ட்விட்டரில் இணைவது குறித்த செய்தி வெளியானதால் ரசிகர்கள் உற்சாகமாக தங்களது வரவேற்பை ட்வீட் மூலம் தெரிவித்து வந்தனர். இதனால் நேற்று இந்திய அளவில் சூர்யா ரசிகர்களின் ஹேஷ்டேக் ஒன்று ட்ரென்டில் இருந்து வந்தது.

சூர்யா ட்விட்டரில் இணைந்த முதல் நாளிலேயே அவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகிறார்கள். அதோடு இந்த எண்ணிக்கை மணிக்கு மணி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஏற்கெனவே ட்விட்டரில் இருக்கும் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை சூர்யாவுக்கு தெரிவித்த வண்ணமுள்ளனர்.

வெல்கம் சூர்யா!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - குலேபா வா பாடல் வீடியோ


;