இறந்தும் வாழவிருக்கும் கிஷோர்!

Last Respects

செய்திகள் 7-Mar-2015 12:54 PM IST VRC கருத்துக்கள்

மூளைச்சாவு ஏற்பட்டு கடந்த ஒரு வாரக்காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த படத்தொகுப்பாளர் கிஷோர் நேற்று மாலை காலமானார். இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்தனர். இதனை தொடர்ந்து அவரது உடலை அவரது சொந்த ஊரானா விழுப்புரம் அருகே உள்ள வளவனூர் கிராமத்திற்கு எடுத்தச் செல்லப்பட்டது. இன்று அவரது சொந்த ஊரில் அவரது இறுதி சடங்குகள் நடைபெறவிருக்கிறது. சென்னை வடபழனியில் உள்ள அலுவலகத்தில் தங்கி எடிட்டிங் பணி புரிந்து வந்த கிஷோர் திருமணம் ஆகாதவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் என 25 படங்களுக்கும் மேல் பணிபுரிந்துள்ள கிஷோரின் இழப்பு, பெரிய இழப்புதான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - என்ன நான் செய்வேன் பாடல் வீடியோ


;