சந்தானத்தை பழி வாங்கிய ஆர்யா!

சந்தானத்தை பழி வாங்கிய ஆர்யா!

செய்திகள் 7-Mar-2015 12:38 PM IST VRC கருத்துக்கள்

நடிகர்கள் ஆர்யாவும், சந்தானமும் நல்ல நண்பர்கள் என்று எல்லோருக்கும் தெரியும். இவர்களது ஆழமான நட்புக்கு சமீபத்தில் பாண்டிசேரியில் நடந்த ஒரு சம்பவத்தை குறிப்பிடலாம்! சந்தானம், அக்‌ஷணா சாவேரி இணைந்து நடிக்கும் 'இனிமே இப்படிதான்' படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்துக் கொண்டிருந்தது. அப்போது அதன் அருகிலேயே ஆர்யா நடிக்கும் 'யட்சன்' படத்தின் படப்பிடிப்புக்காக ஆர்யாவும் அங்கு வந்திருந்தார். ஆர்யாவுக்கு சந்தானம் அருகில் இருப்பது தெரிந்ததும் அந்த படப்பிடிப்பு தளத்துக்கு செல்ல முடிவெடுத்தார் ஆர்யா!

அந்த நேரம் சந்தானம் பாடல் காட்சியில் நடனம் ஆடிக்கொண்டிருந்தார். இதை பார்த்ததும் ஆர்யா சந்தானத்தை கலாய்க்க முடிவு செய்தார் போலும்! சந்தானம் நடனம் ஆடுவதை பார்த்த ஆர்யா, இன்னும் நன்றாக நடனம் ஆட வேண்டும் என்று சந்தானத்தை நிர்பந்தித்துக் கொண்டே இருந்தாராம்! நண்பர் அக்கரையில் தானே சொல்கிறார் என்று மீண்டும் மீண்டும் ஆடிய சந்தானம் கடைசியில் தன் சக்தி முழுவதும் இழந்து சோர்வடைந்து ஒரு இடத்தில் உட்கார்ந்து விட்டாராம்! அப்பாடா நம் வேலை முடிந்துவிட்டது என்று ஆர்யா அங்கிருந்து கிளம்ப துவங்க, அப்போதுதான் சந்தானத்திற்கு புரிந்ததாம் ஆர்யா தன்னை பழி வாங்க திட்டமிட்டு தான் இப்படி செய்திருக்கிறார் என்று! இதனை தொடர்ந்து சந்தானம் ஆர்யாவிடம், ‘போதும் சாமி உங்க விளையாட்டு’ என கையெடுத்து கும்பிட்டவாறு கூறி அங்கிருந்து தப்பித்து கொண்டாராம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;