ஏப்ரல் 17-ல், இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்!

ஏப்ரல் 17-ல், இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்!

செய்திகள் 7-Mar-2015 10:33 AM IST VRC கருத்துக்கள்

‘சலீம்’ படத்தை தொடர்ந்து விஜய் ஆன்டனி நடித்து வரும் ‘இந்தியா பாகிஸ்தான்’ படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதாம்! இதனை தொடர்ந்து இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் படு சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. ‘நான்’ ‘சலீம்’ என வித்தியாசமான படங்களை தேர்வு செய்து நடித்து வரும் விஜய் ஆன்டனி இப்படத்திலும் மாறுபட்ட ஒரு கேரக்டரில் நடித்துள்ளாராம். என்.ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் ஆன்டனியுடன் சுஷ்மா ராஜ் ஜோடியாக நடித்துள்ளார். விஜய் ஆன்டனியின் மனைவி ஃபாத்திமா விஜய் ஆன்டனி இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தை அடுத்த (ஏப்ரல்) மாதம் 17- ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்! விஜய் ஆன்டனியின் ‘இந்திய பாகிஸ்தான்’ ஆட்டத்தை காண தயாராக இருங்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அண்ணாதுரை - டிரைலர்


;