தமிழ் சினிமாவை அதிர வைத்த கிஷோரின் மறைவு!

தமிழ் சினிமாவை அதிர வைத்த கிஷோரின் மறைவு!

செய்திகள் 6-Mar-2015 4:00 PM IST Chandru கருத்துக்கள்

எது நடக்கக்கூடாது என கடந்த சில நாட்களாக திரையுலக பிரபலங்கள் அனைவரும் வேண்டிக் கொண்டிருந்தார்களோ கடைசியில் அது நடந்தேவிட்டது. ஆம்... பேச்சு மூச்சில்லாமல் மரணப் படுக்கையிலிருந்த எடிட்டர் கிஷோர் விண்ணுலகம் சென்றுவிட்டார்.

ஷங்கர் தயாரிப்பில் வெளிவந்து பரவலாக பாராட்டுக்களைப் பெற்ற ‘ஈரம்’ படத்தில் எடிட்டராகப் பணியாற்றிவர் கிஷோர். அதோடு ஆனந்தபுரத்து வீடு, ஆடுகளம், எங்கேயும் எப்போதும், எதிர்நீச்சல் உட்பட பல படங்களில் எடிட்டராகவும் பணியாற்றயிருக்கிறார். ‘ஆடுகளம்’ படத்திற்காக சிறந்த எடிட்டருக்கான தேசிய விருதையும் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெற்றிமாறன் இயக்கிவரும் ‘விசாரணை’ என்ற படத்தில் எடிட்டராகப் பணியாற்றி வருகிறார்.

கடந்த வாரம் படப்பிடிப்புத்தளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென கிஷோர் மயங்கி விழுந்ததால், அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறது ‘விசாரணை’ படக்குழு. கிஷோரை தீவிரமாக பரிசோதித்த டாக்டர்கள் அவரின் மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாயில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாகவே அவர் மயங்கி விழுந்ததாகத் தெரிவித்தார்கள். அதோடு அறுவைச் சிகிச்சை மூலம் அந்த அடைப்பும் சரிசெய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இருந்தபோதிலும் கடந்த சில நாட்களாக அவர் ‘கோமா’ ஸ்டேஜிலேயேதான் இருந்து வந்தார். இதனையடுத்து தமிழ் சினிமாவின் பல பிரபலங்களும் கிஷோர் மீண்டும் உடல்நிலை தேறி வந்து தமிழ் சினிமாவில் பணியாற்ற வேண்டும் என்ற தங்களது விருப்பங்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் தெரிவித்த வண்ணமிருந்தனர். ஆனால் சிறிது நேரத்திற்கு முன்பு கிஷோரின் உயிர் அவர் உடலைவிட்டுப் பிரிந்தது. இதனால் தமிழ் சினமாவே அதிர்ந்துபோய் உள்ளது.

கிஷோரின் குடும்பத்தாருக்கு ‘டாப் 10 சினிமா’ தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;