சேர்ந்து போலாமா – விமர்சனம்

இப்படத்திற்கு சேர்ந்து போகலாம்!

விமர்சனம் 6-Mar-2015 12:26 PM IST Top 10 கருத்துக்கள்

Directed by : Anilkumar
Produced by : Iswarya Entertainment
Starring : Vinay, Mathurima, Preethy Christina Paul, Thambi Ramayya
Music : Vishnu Mohan Sithara
Cinematography : Snjeev Sankar
Editing : Arjuben

முழுக்க முழுக்க நியூசிலாந்தில் படமாக்கப்பட்டுள்ள இந்த ‘சேர்ந்து போலாமா’ படம் என்ன சொல்ல வருகிறது?

கதைக்களம்

பள்ளி பருவத்தில் ஒண்ணா துள்ளி விளையாடிய ஐந்தாறு குழந்தைகள்... அவர்கள் பெரியவர்கள் ஆனதும் அவர்களுக்கிடையில் ஏற்படும் காதல், நட்பு, பழி வாங்கல், ஈகோ இப்படி பல விஷயங்களை சித்தரிக்கிறது இப்படம்! இவர்களில் பிரபல ஃபோட்டோகிராஃபராக திகழும் வினய், மாடலான ப்ரீத்தி கிரிஸ்டினாவை காதலிக்கிறார். உடை மற்றுவதைப் போல காதலனை மாற்றி கொள்ளும் ப்ரீத்தி வினயை விட்டு சென்று விடுகிறார். அவளை தேடி அலையும் வினய்க்கு உதவி புரிய வருகிறார் சின்ன வயதிலிருந்தே வினய் மீது ப்ரியம் கொண்டவரும், ஃபேஷன் டிசைனருமான மதுரிமா! தன் தம்பியின் மரணத்திற்கு வினய் தான் காரணம் என்று நினைக்கும் மதுரிமா, வினய்யுடன் அன்பாக பழகி, அவனை பழி வாங்க திட்டம் போடுகிறார்! இந்நிலையில் வினய் - ப்ரீத்தி கிறிஸ்டினா ஒன்று சேர்ந்தார்களா? மதுரிமாவின் தம்பியை கொன்றவர் யார்? மதுரிமா அந்த கொலையாளியை பழி வாங்கினாரா என்ற கேள்விகளுக்கு பதில் தரும் படமே ‘சேர்ந்து போலாமா’.

படம் பற்றிய அலசல்

நியூசிலாந்தில் வசிக்கும் சில தமிழ் குடும்பங்களின் வாழ்வியலையும், அவர்களுக்குள் ஏற்படும் காதல், பாசம், பழிவாங்குதல் போன்ற விஷயங்களையும் இப்படத்தில் அழகாக சித்தரித்துள்ளார் இயக்குனர் அனில்குமார்! அதற்கு அந்நாட்டின் அழகான லொகேஷன்களும், அந்த லொகேஷன்களை அழகாக படம் பிடித்துள்ள சஞ்சீவ் சங்கரின் ஒளிப்பதிவும், விஷ்ணு மோகன் சித்தாராவின் பின்னணி இசையும் பக்க பலம் சேர்துள்ளன! இடைவேளை வரை மிகவும் ஸ்லோவாக பயணிக்கும் திரைக்கதை, இடைவேளைக்கு பிறகு வேகம் பிடிக்கிறது. கிளைமேக்ஸில் மதுரிமாவின் தம்பியை கொன்றவன் யார்? அவன் எதற்காக அவனை கொன்றான் என்பதை யாரும் யூகிக்காத படி கொண்டு சென்று கதையை முடித்திருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனதை காட்டுகிறது.

நடிகர்களின் பங்களிப்பு

வினய் தனது வழக்கமான பாணியில் அலட்டல் இல்லாமல் நடித்துள்ளார். ஃபேஷன் டிசைனராக வரும் மதுரிமா அழகோ அழகு! படம் முழுக்க கிளாமராக தோன்றி அழகான நடிப்பையும் வழங்கியுள்ளார். மாடலாக வரும் ப்ரீத்தி கிரிஸ்டினா நியூசிலாந்த் கலாசாரத்தை அப்படியே பிரதிபலித்திருக்கிறார்! செல்லும் இடத்தில் எல்லாம் ‘சின்ன வீடு’ செட்-அப் செய்யும் கேரக்டரில் நடித்திருக்கிறார் தம்பி ராமையா. கடைசியில் அந்த பெண்களிடம் மாட்டிக்கொண்டு தம்பி ராமையா தெருவில் ஓடியவாறு, ‘நியூசிலாந்துக்கு வேலைக்கு வருபவர்கள் அந்த வேலையை மட்டும் செய்யுங்க, இல்லையென்றால் இந்த கதி தான்” என்று அட்வைஸ் கூறுவது செம காமெடி! ‘தலைவாசல்’ விஜய், அருண் சசி, நந்து ஆகியோரும் தங்களது கேரக்டர்களை உணர்ந்து நடித்துள்ளனர்.

பலம்

1.இடைவேளைக்கு பிறகு வரும் விறுவிறு திரைக்கதையும், எதிர்பாராத திருப்பங்களும்.
2. நியூசிலாந்தின் அழகை, அழகாக படம் பிடித்துள்ள சஞ்சீவ் சங்கரின் ஒளிப்பதிவும், விஷ்ணு மோகன் சித்தாராவின் பின்னணி இசையும்
3. வித்தியாசமான கிளைமேக்ஸ்

பலவீனம்

1. இடைவேளை வரை ஸ்லோவாக பயணிக்கும் திரைக்கதை.
2. காமெடி போன்ற பொழுது போக்கு அம்சங்கள் இல்லாதது
3.மனதில் நிற்காத பாடல்கள்

மொத்தத்தில்

விசா எடுக்காமலேயே நியூசிலாந்தை சுற்றி பார்த்த உணர்வை தரும் இப்படத்தை அதற்காகவே ஒரு முறை பார்க்கலாம்!

ஒருவரி பஞ்ச் : இப்படத்திற்கு சேர்ந்து போகலாம்!

ரேட்டிங் : 3/10

Key News :

Sernthu Polama is a Tamil movie, directed by Anilkumar. Vinay, Madhurima, Thambi Ramayya acted in this film.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துப்பறிவாளன் - மேக்கிங் வீடியோ


;