மார்ச் 12ல் ஜெயம் ரவி - இமான் கூட்டணியின் முதல் ஆல்பம்!

மார்ச் 12ல் ஜெயம் ரவி - இமான் கூட்டணியின் முதல் ஆல்பம்!

செய்திகள் 6-Mar-2015 11:56 AM IST Chandru கருத்துக்கள்

50க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ள டி.இமான் முதல்முறையாக ஜெயம் ரவியுடன் கூட்டணி சேர்ந்துள்ள படம் ‘ரோமியோ ஜூலியட்’. மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பாக எஸ்.நந்தகோபால் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். கதை, திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்கி வருபவர் லக்ஷ்மன்.

படப்பிடிப்பில் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் ‘ரோமியோ ஜூலியட்’டின் பாடல்கள் வரும் 12ஆம் தேதி வெளியாகவுள்ளன. தன் படத்திற்கு முதல்முறையாக இமான் இசையமைப்பில் பாடல்கள் உருவாகியிருப்பதால் ரசிகர்களிடம் அப்பாடல்களுக்குக் கிடைக்கவிருக்கும் வரவேற்பிற்காக மிகுந்த எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கிறார் ஜெயம் ரவி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கருப்பன் - அழகழகாக பாடல் வீடியோ


;