‘கவலை வேண்டாம்’ ஜீவா!

‘கவலை வேண்டாம்’ ஜீவா!

செய்திகள் 6-Mar-2015 10:59 AM IST Chandru கருத்துக்கள்

‘யான்’ படத்திற்குப் பிறகு வேறு எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார் நடிகர் ஜீவா. காரணம், முந்தைய சறுக்கல்களை ஈடுகட்டும் வகையில் ஒரு தெளிவான கதையைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காகவே அவரின் இந்த காத்திருப்பு. தற்போது தனக்கான அடுத்த கதையைத் தேர்வு செய்துவிட்டார் ஜீவா. ‘யான்’ படத்தை தயாரித்த ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்கிறது.

ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் டீகே இயக்கி கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிபெற்ற படம் ‘யாமிருக்க பயமே’. இந்த கூட்டணி மீண்டும் இணையவிருக்கும் படம் ‘கவலை வேண்டாம்’. இப்படத்தின் நாயகனாக நடிகர் ஜீவா ஒப்பந்தமாகியுள்ளார். இதர நட்சத்திரங்கள், டெக்னீஷியன்களின் தேர்வு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதுதவிர ராம்நாத் இயக்கத்திலும் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார் ஜீவா. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீதிவ்யா நடிக்கிறாராம். இப்படத்திற்கான ஷூட்டிங் விரைவில் துவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கிலி புங்கிலி கதவ தொற - டீசர்


;