விஷ்ணுவுக்கு அதிர்ச்சி கொடுத்த அஜித்!

விஷ்ணுவுக்கு அதிர்ச்சி கொடுத்த அஜித்!

செய்திகள் 6-Mar-2015 10:28 AM IST Chandru கருத்துக்கள்

சினிமா நடிகராக எவ்வளவு புகழ் கிடைத்ததோ அதற்கு சமமாக கிரிக்கெட் வீரராகவும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பு பெற்றவர் நடிகர் விஷ்ணு. நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடி பல போட்டிகளை ஜெயித்துக் கொடுத்துள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு விளையாடிய CCL போட்டியின்போது கைகளில் அடிபட்டு, சிகிச்சையின்போது ஸ்டீல் பிளேட் ஒன்று அவரது கையில் பொருத்தப்பட்டது. கிட்டத்தட்ட 3 வருடங்களுக்குப்பிறகு அவருடைய கையிலிருந்த பிளேட் இரண்டு நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டு, மருத்துமனை ஒன்றில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் விஷ்ணு.

அப்போது திடீரென அங்கு வந்த ‘தல’ அஜித்தைப் பார்த்து சந்தோஷ அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார் விஷ்ணு. ஆபரேஷன் முடிந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த விஷ்ணுவிடம் நலம்விசாரித்து, உடல் நலனைப் பார்த்துக்கொள்ளுமாறு அக்கறையுடன் கூறினாராம் அஜித். அப்போது விஷ்ணுவின் தம்பியும் உடனிருந்ததால் அஜித்துடன் அவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த தகவலை நடிகர் விஷ்ணு தன்னுடைய ட்வீட்டில் சந்தோஷமாக பகிர்ந்திருக்கிறார்.

நடிகர் விஷ்ணு தங்கியிருந்த அதே மருத்துவமனையில்தான் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு இரண்டாவது குழந்தை பிறந்ததாகக் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;