தனுஷ், விஜய் சாதனையை முறியடித்த சிம்பு!

தனுஷ், விஜய் சாதனையை முறியடித்த சிம்பு!

செய்திகள் 5-Mar-2015 5:56 PM IST Chandru கருத்துக்கள்

3 வருடங்களாக படமே வரவில்லையென்றாலும் சிம்புவிற்கு இருக்கும் வரவேற்பு இன்னும் குறையவில்லை என்பதையே அவரின் தற்போதைய சாதனை காட்டுகிறது. ‘வாலு’ படம் வரும் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கத்தில் நயன்தாராவுடன் இணைந்து சிம்பு நடித்திருக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் கடந்த ஜனவரி 15ஆம் தேதி யூ டியூப்பில் வெளியிடப்பட்டது.

பாண்டிராஜ் இயக்கம், சிம்புவும் நயன்தாராவும் மீண்டும் இணைந்து நடித்திருப்பது, சூரி, சந்தானம் ஆகியோரின் காமெடி, குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகும் படம் என பல விஷயங்களால் ‘இது நம்ம ஆளு’ டீஸருக்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. அதோடு டீஸரும் ரொமான்ஸ் + காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருந்ததால் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றது. இதனால் இந்த டீஸர் வெளியான இரண்டு மூன்று நாட்களுக்குள்ளாகவே 10 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து சாதித்தது. அதோடு தற்போது வரை அந்த டீஸர் 35 லட்சம் முறை ரசிகர்கள் பார்க்கப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

தனுஷ் படங்களின் டீஸர்/டிரைலர்களைப் பொறுத்தவரை ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் டிரைலரே இதுவரை அதிகபட்ச முறை (கிட்டத்தட்ட 29 லட்சம்) பார்க்கப்பட்டுள்ளது. அதேபோல் விஜய்யின் கேரியரில் ‘தலைவா’ பட டிரைலரையே இதுவரை (3,461,507) ரசிகர்கள் அதிகமுறை பார்த்துள்ளனர். தற்போது சிம்புவின் ‘இது நம்ம ஆளு’ இந்த இரண்டு சாதனைகளையும் முறியடித்துள்ளது. விரைவில் சூர்யாவின் ‘அஞ்சான்’ பட டீஸர் சாதனை யும் (36 லட்சம்) முறியடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர் 2


;