சினிமாவை கற்க ஒரு புதிய அகாடமி!

சினிமாவை கற்க ஒரு புதிய அகாடமி!

கட்டுரை 5-Mar-2015 5:45 PM IST VRC கருத்துக்கள்

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ‘யு.டி.வி.’யின் தென்மண்டல அதிகாரியாக இருப்பவர் தனஞ்செயன். இவர் BOFTA (BLUE OCEAN FILM & TELEVISION ACADEMY) என்ற பெயரில் திரைப்படம் சம்பந்தப்பட்ட விஷயங்களை கற்கும் அகாடமி ஒன்றை துவக்கியுள்ளார். இதன் துவக்க விழா நேற்று (மார்ச்-4) மாலை சென்னையிலுள்ள மியூசிக் அகாடமியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்த அகாடமியில் சினிமா மற்றும் தொலைக்காட்சி துறையில் பல ஆண்டு கால அனுபவம் பெற்றவர்களை கொண்டு பாடம் பயிலும் அரிய வாய்ப்பை மாணவர்களுக்கு வழங்குகிறது. ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு ஆண்டு காலம் முழு நேர பயிற்சியாக வழங்கப்பட உள்ள இந்த அகாடமியில்,

இயக்குனர் பயிற்சிக்கான துறையின் தலைவராக இயக்குனர் மகேந்திரன், திரைக்கதை பயிற்சிக்கான துறையின் தலைவராக இயக்குனரும், நடிகருமான கே.பாக்யராஜ், நடிப்பு சம்பந்தமான பயிற்சி துறையின் தலைவராக நடிகர் நாசர், ஒளிப்பதிவு சம்பந்தப்பட்ட பாடப் பிரிவுக்கான துறை தலைவராக மது அம்பாட், படத்தொகுப்பு சம்பந்தப்பட்ட பிரிவு தலைவராக எட்டிட்டர் லெனின், பட தயாரிப்பு சம்பந்தமான பயிற்சி துறையின் தலைவராக தயாரிப்பாளர் டி.சிவா, தொலைக்காட்சி தொடர் சம்பந்தப்பட்ட படிப்பு துறை தலைவராக குட்டி பத்மினி, ஜெர்னலிசம் சம்பந்தப்பட்ட துறையின் தலைவராக கார்ட்டூனிஸ்ட் மதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தவிர இயக்குனர்கள் பார்த்திபன், மனோபாலா, வெங்கட் பிரபு, விஷ்ணுவர்த்தன், விஜய், சசி, பாண்டிராஜ், ராம், கார்த்திக் சுப்பராஜ், ஆர்.எஸ்.பிரசன்னா, கே.ராஜேஷ்வர், ஞான ராஜசேகரன், மகேஷ் முத்துசாமி, ஒளிப்பதிவாளர் பி.கண்ணன், நடிகர்கள் ஷண்முகராஜா, மோகன்ராம் உட்பட பலரின் பங்களிப்பும் இந்த அகாடமியில் இருக்குமாம்! சினிமா பற்றி கற்க விரும்புவோருக்கு அதிநவீன முறையில் அமைந்துள்ள இந்த அகாடமி பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பலாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;