கருணாஸின் சூர்யா, கார்த்தி சென்டிமென்ட்!

கருணாஸின் சூர்யா, கார்த்தி சென்டிமென்ட்!

செய்திகள் 5-Mar-2015 4:33 PM IST VRC கருத்துக்கள்

‘‘நான் நடித்த முதல் படம் பாலா சார் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘நந்தா’. 2001-ல் வெளியான இப்படத்தில் ‘லொடுக்கு பாண்டி’ எனும் கேரக்டரில் நடித்திருந்தேன்! அந்தப் படத்தை தொடர்ந்து காமெடி கேரக்டர், குணச்சித்திரம், ஹீரோ என ஏராளமான படங்களில் நடித்து விட்டேன்! 2001-ல் நடிக்க துவங்கிய என்னுடைய 100-ஆவது படமாக கார்த்தி ஹீரோவாக நடித்துள்ள ‘கொம்பன்’ படம் அமைந்துள்ளது. நான் அறிமுகமான படத்தின் ஹீரோ சூர்யா, என்னுடைய 100-ஆவது படத்தின் ஹீரோ சூர்யாவின் தம்பி கார்த்தி! என்ன சென்டிமென்ட் பாருங்கள்! கார்த்தியுடன் நான் முதன் முதலாக இணைந்து நடித்த படம் கூட ‘கொம்பன்’’ என்றார் கருணாஸ் இன்று காலை சென்னையில் நடந்த ‘கொம்பன்’ பட புரொமோஷன் நிகழ்ச்சியில்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;