ஏஞ்சலினா ஜோலியாக ஆசைப்படும் CSK நாயகி!

ஏஞ்சலினா ஜோலியாக ஆசைப்படும் CSK நாயகி!

செய்திகள் 5-Mar-2015 1:05 PM IST Chandru கருத்துக்கள்

எஸ்.எஸ். ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், வைப்ரன்ட் மூவீஸ் வெளியீட்டில் மார்ச் 13 ஆம் தேதி வெளிவர உள்ளது CSK (சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா) திரைப்படம் . புதுமுக இயக்குனர் சத்திய மூர்த்தி இயக்கும் இப்படத்தில் ‘இனிது இனிது’ ஷரண், நாராயண், விமல் மற்றும் ‘ஆரோகணம்’ ஜெய் குஹைனி நடித்துள்ளனர். ஃபிலிம் டெக்னாலஜி படித்து முடித்துள்ள இவர் எதிலும் புதுமையைத் தேடும் நாயகியாம். சிஷிரி படத்தில் உள்ள தனது அனுபவங்களை பற்றி விவரிக்கிறார் ஜெய் குஹைனி.

“CSK படத்தில் கார்த்திகா எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். படத்தில் எனக்கு வசனங்கள் குறைவு. ஆனால் நடிப்பதற்கு வாய்ப்புள்ள கேரக்டர் இது. நடிக்கவே வேண்டாம் என்று முடிவெடுத்த போது இந்த கதையை இயக்குனர் சத்யா என்னிடம் கூறினார். உடனே முடிவை மாற்றிக்கொண்டேன்.

200 லிட்டர் தண்ணி இருக்கும் டேங்கில் கை, கால்களைக் கட்டி முங்க விட்டது, இரண்டு மாடிகள் கையைக் கட்டி தரதரவென இழுத்துச் சென்றது என ஒரு ஹீரோக்கு நிகராய் காட்சிகள் இருந்தன. இத்தகைய காட்சிகள் டூப் போடாமல் நடித்ததில் எனக்கு காயங்கள் ஏற்பட்டாலும் அதை நான் விரும்பிச் செய்தேன்.

CSK படத்தில் நடித்த பிறகு, ஏஞ்சலினா ஜோலி போல் ஒரு ‘Tom Boy’ கதாப்பாத்திரத்தில் அதிரடி சண்டை காட்சிகளுடன் நடிக்க வேண்டும் என்பது என் ஆசையாக மாறியுள்ளது. படத்தின் ஆரம்பத்தில் வரும் ‘உந்தன் முகம் பார்க்க’ பாடல் அனைவரையும் கவரும். இப்படத்தில் பல நபர்களின் நெடு நாள் உழைப்பு இருக்கிறது. அனைவரும் பார்க்கக்கூடிய குடும்பத் திரைப்படம் இது” என்று மெல்லிய இதழ்கள் புன்னகை சிதறக் கூறினார் ஜெய் குஹைனி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பேபி படத்தின் மோஷன் போஸ்டர் டீசர்


;