‘தெகிடி’ ஹீரோ, ‘கழுகு’ ஹீரோயின் இணையும் படம்!

‘தெகிடி’ ஹீரோ, ‘கழுகு’ ஹீரோயின் இணையும் படம்!

செய்திகள் 5-Mar-2015 10:14 AM IST VRC கருத்துக்கள்

‘சூதுகவ்வும்’, ‘தெகிடி’ ஆகிய படங்களில் நடித்த அசோக்செல்வன் கதாநாயகானக நடிக்கும் படம் ‘சவாலே சமாளி’. இப்படத்தில் அசோக்செல்வனுக்கு ஜோடியாக பிந்துமாதவி நடிக்கிறார். நடிகர் அருண்பாண்டியனின் ‘A&P குரூப்ஸ்’ நிறுவனம் சார்பில் கவிதா பாண்டியன், எஸ்.என்.ராஜராஜன் தயாரிக்கும் இப்படத்தை சத்யசிவா இயக்குகிறார். இந்தப் படம் குறித்து சத்யசிவா கூறும்போது,

‘‘நான் இயக்கிய ‘கழுகு’ படம் எப்படி வேறு ஒரு கதையோட்டமாக கருதப்பட்டதோ, அதைப்போல ‘சிவப்பு’ படம் இன்னொரு கோணத்தை காட்டும். இந்த ‘சவாலே சமாளி’ படம் முழுக்க முழுக்க காமெடி கலாட்டா தான். முதல் ரீல் முதல் கடைசி ரீல் வரை ஒரே காமெடி தான். யாருமே அறிந்திராத ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை செய்கிறான் அசோக் செல்வன் மற்றும் ஜெகன் கோஷ்டி! சேனல் வளர்ச்சியடையாதபோது ஜாலியாக இருந்தார்கள்! ஒரு கட்டத்தில் சேனலை வளர்ப்பதற்காக சில ஐடியாக்களை செய்கிறார்கள். அதில் சேனல் அமோக வளர்ச்சி அடைகிறது. ஆனால் அதுவரை ஜாலியாக இருந்த அவர்களுக்கு பிரச்சனைகள் வருகிறது. அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா? இல்லையா? என்பது தான் இப்படத்தின் மையக் கரு’’ என்றார்.

இந்தப் படத்தில் அசோக் செல்வன், பிந்துமாதவியுடன் நாசர், ஊர்வசி, கருணாஸ், சுவாதி, கஞ்சா கருப்பு, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, ப்ரீத்தி தாஸ், வையாபுரி, நெல்லை சிவா என பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்திருக்கிறது. இப்படத்திற்கு பி.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய, எஸ்.எஸ்.தமன் இசை அமைக்கிறார். வேகமாக வளர்ந்து வருகிறது இப்படம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காஸி - மேக்கிங் வீடியோ


;