எமியைக் காப்பாற்றி நிஜ ஹீரோவான கருணா!

எமியைக் காப்பாற்றி நிஜ ஹீரோவான கருணா!

செய்திகள் 4-Mar-2015 12:21 PM IST Chandru கருத்துக்கள்

உதயநிதி, நயன்தாரா நடித்திருக்கும் ‘நண்பேன்டா’ படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் ‘மான் கராத்தே’ திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி, எமி ஜாக்ஸன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி தொடங்கியது. இப்படத்திற்கான முதல் ஷெட்யூல் கேரளாவில் உள்ள அழகிய இடங்களில் படமாக்கப்பட்டது. இந்த படப்பிடிப்பில் உதய், எமியுடன் நடிகர் கருணாவும் கலந்து கொண்டிருக்கிறார்.

பிப்ரவரி 22ஆம் தேதி தொடங்கிய இந்த முதல் ஷெட்யூல் நேற்றோடு முடிந்துவிட்டதாக நடிகை எமி ஜாக்ஸன் தனது ட்வீட்டில் தெரிவித்திருக்கிறார். அதோடு கேரள மலையில், நெங்குத்தான இடம் ஒன்றில் ஏறும்போது நடிகை எமி ஜாக்ஸன் தடுமாறி சறுக்கியபோது, நடிகர் கருணா அவருக்கு கைகொடுத்து தூக்கியிருக்கிறார். இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு கருணாவுக்கு ட்வீட் மூலம் நன்றி தெரிவித்திருக்கிறார் எமி. இதனை வேடிக்கையாக உதயநிதியும் ‘‘நேற்று எமி ஜாக்ஸனை காப்பாற்றினார் கருணா. உண்மையான ஹீரோ. ‘நான் என் கடமையைத்தானே செஞ்சேன்’.’’ என ட்வீட் செய்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - குலேபா வா பாடல் வீடியோ


;