தயாரிப்பாளர் சங்கத்திற்கு போகும் இளையராஜாவின் பொக்கிஷம்!

தயாரிப்பாளர் சங்கத்திற்கு போகும் இளையராஜாவின் பொக்கிஷம்!

செய்திகள் 4-Mar-2015 11:54 AM IST VRC கருத்துக்கள்

இசை அமைப்பாளர் இளையராஜா தான் இதுவரை இசை அமைத்த 1001- பங்களின் இசை ராயல்டியையும் அந்தந்த படங்களின் தயாரிப்பாளர்களுக்கே விட்டுக் கொடுக்க முடிவு செய்துள்ளார் என்றும், இது சம்பந்தமான விழா ஒன்று விரைவில் நடைபெற இருக்கிறது என்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் ‘கலைப்புலி’ எஸ். தாணு சமீபத்தில் நடந்த ‘சார்லஸ் ஷஃபீக் கார்த்திகா’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஏற்கெனவே தான் இசை அமைத்த படங்களின் பாடல்களை தனது அனுமதி பெறாமல் பலர் விற்பனை செய்து வருவதாக கூறியும், அதற்கு உடனே தடை விதிக்க வேண்டும் என்று கூறியும் இளையராஜா சென்னை உயர்நீதி மனறத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் அளித்த இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பையா குறிப்பிட்ட 5 நிறுவனங்கள் இளையராஜாவின் பாடல்களை விற்பனை செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜாவின் பாடல்களை ஒலிபரப்பவும், விற்பனை செய்யவும் அகி உட்பட 5 நிறுவனங்களுக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து இளையராஜா, தான் இதுவரை இசை அமைத்த மொத்த படங்களின் ராயல்டியையும் ஒரு பொக்கிஷத்தை போன்று தயாரிப்பாளர் சங்கத்திற்கு வழங்கவிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டீசர்


;