2 மணி நேர காமெடிக்கு ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ உத்தரவாதம்!

2 மணி நேர காமெடிக்கு ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ உத்தரவாதம்!

செய்திகள் 4-Mar-2015 11:03 AM IST VRC கருத்துக்கள்

ன்னத்திரை புகழ் தீபக் முதன் முதலாக பெரிய திரைக்கு வந்து ஹீரோவாக நடித்துள்ள படம் ‘இவனுக்கு தண்ணில கண்டம்’. முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தில் தீபக் டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளராகவே நடித்திருக்கிறார். சின்னத்திரை இயக்குனரான எஸ்.என்.சக்திவேல் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் தீபக்குக்கு ஜோடியாக கேரளாவை சேர்ந்த கை நேகா நடித்துள்ளார். இவர்களுடன் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், குமரவேல், ஆர்.பாண்டியராஜன், சென்ட்ராயன், மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன், டி.எம்.கார்த்திக், ‘மானாட மயிலாட’ புகழ் சாண்டி என பலர் நடித்துள்ளனர். ‘A7 BAND’ என்ற பெயரில் திலீப், சரண், பிரசன்னா ஆகிய மூவர் இணைந்து இப்படத்திற்கு இசை அமைத்துள்ளனர். அர்.வெங்கடேசன் ஒளிப்பதிவை கவனித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் நேற்று வெளியானது. இதனை தொடர்ந்து நடந்த புரொமோஷன் நிகழ்ச்சியில் இப்படத்தின் தயரிப்பாளார் வி.வெங்கட்ராஜ் பேசும்போது,

‘‘ஒரு நண்பனுக்காக நான் தயாரிக்க திட்டமிட்டு துவங்கிய படம் இது. ஆனால் இப்போது இந்த படத்தில் பணியாற்றிய அத்தனை பேரும் எனக்கு நண்பர்களாகி விட்டனர்.

‘வி.வி.ஆர்.சினிமாஸ்க்’ என்ற எனது நிறுவனத்தின் முதல் தயாரிப்பு இது! இரண்டு மணி நேரம் முழுக்க சிரித்துக்கொண்டே இருக்கக் கூடிய வகையில் ஒரு முழுநீள காமெடி படமாக இதனை இயக்கி தந்திருக்கிறார் சக்திவேல்! தீபக், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், குமரவேல், சென்ட்ராயன், மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், ஆர்.பாண்டியராஜன் என படத்தில் நடித்துள்ள அத்தனை பேரும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்து இப்படம் சிறந்த ஒரு காமெடி படமாக உருவாக பெரும் உதவி புரிந்துள்ளனர். இப்படத்தை வருகிற 13-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்! இரண்டு மணி நேர காமெடிக்கு ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ படம் உத்தரவாதம்’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சேரனின் சினிமா 2 ஹோம் விளம்பரம் - வீடியோ


;