விஷால் – சுசீந்திரன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

விஷால் – சுசீந்திரன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

செய்திகள் 4-Mar-2015 10:35 AM IST VRC கருத்துக்கள்

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியது. ‘வேந்தர் மூவீஸ்’ தயாரிக்கும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். ‘பாண்டிய நாடு’ படத்திற்கு பிறகு விஷாலும், சுசீந்திரனும் இணைந்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னை சேத்துபட்டில் உள்ள செந்தூரப்பூவே பங்களாவில் நடந்து வருகிறது. இப்படத்தின் ஒளிப்பதிவை மதி கவனிக்க, டி.இமான் இசை அமைக்கிறார். ராஜீவன் சண்டை காட்சிகளை அமைக்கிறார். ‘பாண்டியநாடு’ வெற்றிப் படத்தை தொடர்ந்து சுசீந்திரனும், விஷாலும் இணைந்துள்ள இப்படம் இப்போதே ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கிலி புங்கிலி கதவ தொற - டிரைலர்


;