அருள்நிதிக்கு திருமண நிச்சயதார்த்தம்!

அருள்நிதிக்கு திருமண நிச்சயதார்த்தம்!

செய்திகள் 3-Mar-2015 11:39 AM IST VRC கருத்துக்கள்

பாண்டிராஜ் இயக்கிய ‘வம்சம்’ படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் அருள்நிதி. இந்தப் படத்தை தொடர்ந்து ‘மௌனகுரு’, ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்’ உட்பட பல படங்களில் நடித்த அருள்நிதி நடித்து அடுத்து ரிலீசாகவிருக்கும் படங்கள் ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’, ‘டிமான்டி காலனி’ ஆகியவை! தமிழ் சினிமாவின் பெரும்பாலான இளம் ஹீரோக்களும் திருமணம் செய்துகொண்டுள்ள நிலையில் அருள்நிதிக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. இதனையொட்டி நேற்று மாலை அருள்நிதியின் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடந்து முடிந்துள்ளது. அருள்நிதி மணக்கப் போகிறவரின் பெயர் கீர்த்தனா. இவர் முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் மகளாம்! நேற்று நடந்த இந்த திருமண நிச்சயதார்த்தத்தில் இரு குடும்பத்தினரின் உற்ற உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்! விரைவில் இல்லறத்தில் அடியெடுத்து வைக்க இருக்கும் அருள்நிதிக்கு ‘டாப் 10 சினிமா’வின் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரவுக்கு ஆயிரம் கண்கள் - டீசர்


;