மீண்டும் பிரபு சாலமன் படத்தில் ‘கயல்’ ஹீரோ!

மீண்டும் பிரபு சாலமன் படத்தில் ‘கயல்’ ஹீரோ!

செய்திகள் 3-Mar-2015 11:14 AM IST VRC கருத்துக்கள்

பிரபு சாலமன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘கயல்’ படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்றாலும், இப்படம் பார்த்து ரசிக்க கூடிய படமாக அமைந்திருந்தது. இப்படத்தின் மூலம் சந்திரன் என்ற புதுமுகத்தை கதாநாயகனாக அறிமுகப்படுத்திய பிரபு சாலமன், அடுத்து தனது ‘காட் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படத்திலும் சந்திரனேயே ஹீரோவாக்கியிருக்கிறார். இந்தப் படத்தை ‘சாட்டை’ படத்தை இயக்கிய அன்பழகன் இயக்குகிறார். இப்படத்திற்கும் பிரபு சாலமனின் ஆஸ்தான இசை அமைப்பாளர் டி.இமான் தான் இசை அமைக்கிறார். படத்திற்கான மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் தேர்வு இப்போது நடந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் துவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திட்டம் போட்டு திருடுற கூட்டம் - டீசர்


;