‘ஆடுகளம்’ பட எடிட்டர் கிஷோர் கவலைக்கிடம்...?

‘ஆடுகளம்’ பட எடிட்டர் கிஷோர் கவலைக்கிடம்...?

செய்திகள் 3-Mar-2015 10:14 AM IST Chandru கருத்துக்கள்

ஷங்கர் தயாரிப்பில் வெளிவந்து பரவலாக பாராட்டுக்களைப் பெற்ற ‘ஈரம்’ படத்தில் எடிட்டராகப் பணியாற்றிவர் கிஷோர். அதோடு ஆனந்தபுரத்து வீடு, ஆடுகளம், எங்கேயும் எப்போதும், எதிர்நீச்சல் உட்பட பல படங்களில் எடிட்டராகவும் பணியாற்றயிருக்கிறார். ‘ஆடுகளம்’ படத்திற்காக சிறந்த எடிட்டருக்கான தேசிய விருதையும் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெற்றிமாறன் இயக்கிவரும் ‘விசாரணை’ என்ற படத்தில் எடிட்டராகப் பணியாற்றி வருகிறார்.

கடந்த வாரம் படப்பிடிப்புத்தளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென கிஷோர் மயங்கி விழுந்ததால், அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறது ‘விசாரணை’ படக்குழு. கிஷோரை தீவிரமாக பரிசோதித்த டாக்டர்கள் அவரின் மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாயில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாகவே அவர் மயங்கி விழுந்ததாகத் தெரிவித்தார்கள். அதோடு அறுவைச் சிகிச்சை மூலம் அந்த அடைப்பும் சரிசெய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும்கூட தற்போது வரை எடிட்டர் கிஷோர் கண்விழிக்காமல் மயக்க நிலையிலேயே இருப்பதால் அவரின் குடும்பத்தார் மிகுந்த கவலையில் உள்ளனர்.

தொடர்ந்து ஐ.சி.யூ.வில் இருந்துவரும் எடிட்டர் கிஷோர் விரைவில் நினைவு திரும்பி, மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்பவேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனை!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;