மீண்டும் ‘காதலா காதலா’வின் சூப்பர் கூட்டணி!

மீண்டும் ‘காதலா காதலா’வின் சூப்பர் கூட்டணி!

செய்திகள் 3-Mar-2015 9:52 AM IST Chandru கருத்துக்கள்

போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி என தமிழில் இதுவரை 4 படங்களை இயக்கியிருக்கிறார் பிரபுதேவா. ஆனால் அதன் பிறகு முழுமையாக பாலிவுட்டிற்குச் சென்றுவிட்டார். இந்நிலையில் பாலிவுட்டிலிருந்து மீண்டும் தமிழுக்கு வரவிருக்கிறார் அவர்.

காணாமல் போன மலேசிய விமானத்தை மையமாக வைத்து எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதிய ‘வெல்வெட் குற்றங்கள்’ என்ற தொடர்கதையை ஹிந்தி படமாக்கும் முயற்சியில் தற்போது இறங்கியிருக்கிறார் இயக்குனர் பிரபுதேவா. ‘ரவுடி ரத்தோர்’ படத்தைத் தொடர்ந்து இப்படத்திலும் அக்ஷய்குமார் நாயகனாக நடிப்பார் எனத் தெரிகிறது. ஆனால் இப்படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளே இன்னும் ஆரம்பிக்கப்படாததால், அதற்கிடையில் தமிழில் ஒரு படத்தை எடுத்துவிடலாம் என்ற முடிவில் பிரபுதேவா இருப்பதாகத் தெரிகிறது.

‘நிமிர்ந்துநில்’ படத்தை தயாரித்த ‘வாசன் விஷுவல் வெஞ்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் உருவாகவிருக்கும் புதிய படமொன்றை பிரபுதேவா இயக்க அதில் உலகநாயகன் கமல் ஹீரோவாக ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். ‘உத்தம வில்லவன்’, ‘பாபநாசம்’ ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருவதோடு, ‘விஸ்வரூபம் 2’ படத்தின் வேலைகளும் கடைசிகட்டத்தில் இருப்பதால், விரைவில் பிரபுதேவா இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் கமல் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் பணியாற்றவிருக்கும் நட்சத்திரங்கள், டெக்னீஷியன்களுடன் கூடிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல், பிரபுதேவா இணைந்து நடித்து 1998ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘காதலா காதலா’. முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருந்த இப்படத்தின் நாயகர்களான கமலும், பிரபுதேவாவும் மீண்டும் ஒரு படத்தில் இணையவிருக்கிறார்கள். ஆனால், இந்த முறை பிரபுதேவா இயக்க, அப்படத்தில் கமல் ஹீரோவாக நடிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

போகன் - செந்தூரா வீடியோ


;