‘ரஜினி முருகனை’த் தொடர்ந்து ‘ஓ காதல் கண்மணி’!

‘ரஜினி முருகனை’த் தொடர்ந்து ‘ஓ காதல் கண்மணி’!

செய்திகள் 3-Mar-2015 9:45 AM IST Chandru கருத்துக்கள்

‘கடல்’ படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஓ காதல் கண்மணி’. ரஹ்மானின் துள்ளல் இசை, பி.சி.ஸ்ரீராமின் மயக்கும் ஒளிப்பதிவு என டெக்னிக்கல் உச்சபட்சங்களுடன் உருவாகிவரும் இப்படத்தின் முதல் டிரைலர் நேற்று இணையதளத்தில் வெளிவந்து, ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அதோடு அந்த டிரைலர் வெளியாகி 2 நாட்களுக்குள் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை அந்த வீடியோ கண்டுகளிக்கப்பட்டு சாதனை புரிந்துள்ளது. மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை கே.ஈ.ஞானவேல்ராஜாவின் ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் வாங்கியுள்ளது.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் பணியாற்றிய இயக்குனர் பொன்ராம், நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூரி ஆகியோர் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மீண்டும் இணைந்திருக்கும் ‘ரஜினி முருகன்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையையும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சமீபத்தில் வாங்கியது குறிப்பிடத்தக்கது. ‘ஓ காதல் கண்மணி’ ஏப்ரல் மாதத்திலும், ‘ரஜினி முருகன்’ மே மாதத்திலும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;