சேட்டிலைட் உரிமை பிரச்சனைக்கு விரைவில் தீர்வு!

சேட்டிலைட் உரிமை பிரச்சனைக்கு விரைவில் தீர்வு!

செய்திகள் 2-Mar-2015 1:20 PM IST VRC கருத்துக்கள்

இசை அமைப்பாளர் இளையராஜா தான் இதுவரை இசை அமைத்த 1001- பங்களின் இசை ராயல்டியையும் அந்தந்த படங்களின் தயாரிப்பாளர்களுக்கே விட்டுக் கொடுக்க முடிவு செய்துள்ளாராம். இதனை நேற்று முன் தினம் சென்னையில் நடந்த ‘சார்லஸ் ஷஃபீக் கார்த்திகா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு தெரிவித்தார். முன்னதாக இந்த விழாவில் பேசிய ‘சார்லஸ் ஷஃபீக் கார்த்திகா’ திரைப்படத்தின் விநியோகஸ்தர் ‘வைபரன்ட் மூவீஸ்’ வெங்கடேஷ் பேசும்போது,

‘‘இப்போதெல்லாம் டி.வி. சேனல்கள் பெரிய நடிகர்கள் நடித்த படங்களை மட்டும் தான் வாங்குகிறது. சின்ன நடிகர்கள் நடித்த, சிறிய பட்ஜெட் படங்களை வாங்குவதில்லை. எல்லா படங்களின் சேட்டிலைட் உரிமங்களை வாங்கினால் தான் விநியோகஸ்தர்கள் தொடர்ந்து திரைப்படங்களை வாங்கி வெளியிட முடியும். கடந்த அக்டோபர் மாதத்திற்குப் பிறகு எந்த ஒரு டிவியும் திரைப்படங்களின் சேட்டிலைட் உரிமத்தை வாங்கவில்லை. தயாரிப்பாளரிடமிருந்து டி.வி.உரிமத்தை நாங்கள் வாங்குகிறோம். அதில் அதிக அளவில் முதலீடு செய்கிறோம். இந்த உரிமங்கள் விற்பனையானால் தான் எங்களால் தொடர்ந்து படங்களை வெளியிட முடியும். அதனால் தயாரிப்பாளர் சங்கம் இந்த விஷய்த்தில் தலையிட்டு படங்களை டி.வி.க்கள் வாங்க வழிவகை செய்ய வேண்டும்’’ என்று கேட்டு கொண்டார். இதற்கு பதிலளித்து பேசிய தாணு,
‘‘இந்த மாதம் (மார்ச்) 8-ஆம் தேதி திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூடவிருக்கிறது. சங்க உறுப்பினர்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவிக்க இருக்கிறோம். தயாரிப்பாளர் சங்கத்தில் 950 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நாங்கள் பொறுப்பேற்ற பின்பு கடிதம் மூலம் டி.வி.சாட்டிலைட் உரிமம் பற்றி கடிதம் எழுதினோம். செல்ஃபோனில் மெஸ்ஸேஜும் அனுப்பினோம். இது வரையில் 30 உறுப்பினர்கள் மட்டுமே தங்களது படங்களின் சேட்டிலைட் உரிமத்தை விற்பனை செய்ய முன்வந்து பதிவு செய்துள்ளனர். அடுத்த ஒரு மாதத்திற்குள் சமப்ந்தப்பட்ட படங்களின் சேட்டிலைட் உரிமையை விற்பனை செய்ய தயரிப்பாளர் சங்கம் முன்வந்து தக்க நடவடிக்கை எடுக்கும். இளையராஜா தான் இதுவரை இசை அமைத்த அத்தனை படங்களின் ராயல்ட்டியையும் அந்தந்த தயாரிப்பாளருக்கே தர முன் வந்துள்ளார். இது சம்பந்தமான பல நல்ல அறிவிப்புகளும் விரைவில் வரும்’’ என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து ‘சார்லஸ் ஷஃபீக் கார்த்திகா’ படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டது. ‘எஸ்.எஸ்.ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் சார்பில் ஸ்ரீனிவாசன் தயாரித்திருக்கும் இப்படத்தை பிரகாஷ்ராஜிடம் உதவி இயக்குனராக இருந்த சத்யமூர்த்தி சரவணன் இயக்கியுள்ளார். சரண்குமார், நாராயண், மிஷால், ஜெய் குகைனி முதலானோர் நடித்துள்ள இப்படத்திற்கு சித்தார்த் இசை அமைத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - தாடிக்காரா ஆடியோ பாடல்


;