முக்கிய மைல்கல்லை எட்டிய ஷங்கரின் ‘ஐ’

முக்கிய மைல்கல்லை எட்டிய ஷங்கரின் ‘ஐ’

செய்திகள் 2-Mar-2015 12:49 PM IST Chandru கருத்துக்கள்

ஷங்கர் இயக்கத்தில் விக்ரமின் மாறுபட்ட பரிமாணங்களில் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 14ஆம் தேதி உலகமெங்கும் ‘ஐ’ திரைப்படம் வெளியானது. விக்ரமின் வித்தியாசமான தோற்றம், கண்ணைக் கவரும் படப்பிடிப்புத்தளங்கள், அருமையான பாடல்கள், பி.சி.ஸ்ரீராமின் உலகத்தரம் வாய்ந்த ஒளிப்பதிவு என இப்படம் ஹாலிவுட் படத்திற்கு இணையாக இருப்பதாக பல ரசிகர்களும் கருத்துத் தெரிவித்தார்கள். ஆனாலும் விமர்சனரீதியாக ஷங்கரின் திரைக்கதை யுக்திக்கு சில எதிர்மறையான கருத்துக்கள் வெளிவந்ததையும் மறுப்பதற்கில்லை.

இருந்தபோதிலும் இதபோன்ற படங்களை தியேட்டரில் மட்டுமே பார்க்க வேண்டும் என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்ததால், குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்தனர். முதல்நாளில் மட்டும் உலகளவில் இப்படம் 25 கோடிக்கும் மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. அதோடு தற்போது இப்படம் 50 நாட்களைக் கடந்தும் இன்னும் சில திரையரங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை ‘ஐ’ திரைப்படம் 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கும் என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டாளி - டிரைலர்


;