‘கத்தி’ இயக்குனருக்கு கிடைத்த அங்கீகாரம்!

‘கத்தி’ இயக்குனருக்கு கிடைத்த அங்கீகாரம்!

செய்திகள் 2-Mar-2015 12:22 PM IST Chandru கருத்துக்கள்

சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் அன்றாடம் தொடர்பில் இருந்து வருபவர் ‘கத்தி’யின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். குறிப்பாக ‘துப்பாக்கி’ படத்திற்குப் பின்னரே அவர் இதுபோல் ட்விட்டர் மூலம் தனது கருத்துக்களை ரசிகர்களுக்கு தெரிவித்து வருகிறார். விஜய்யை வைத்து இயக்கிய ‘கத்தி’ படத்தின் முதல்நாள் வசூல் எவ்வளவு என்ற விவரத்தை முதல் ஆளாக முருகதாஸ் தனது ட்விட்டர் மூலம் தெரிவித்தது ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வருடங்களாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ட்விட்டரில் கணக்கு வைத்திருந்தாலும், அதிகாரபூர்வ கணக்கு என ட்விட்டர் அறிவிக்காமலேயே இருந்தது. தற்போது அவரின் @ARMurugadoss என்ற ட்விட்டர் கணக்கிற்கு அதிகாரபூர்வ அங்கீகாரம் கிடைத்துள்ளது. முருகதாஸின் ட்விட்டர் கணக்கை இதுவரை 7 லட்சத்து 80 ஆயிரம் பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள். அதேபோல் அவரின் facebook.com/OfficialARMurugadoss என்ற ஃபேஸ்புக் பக்கமும் ஏற்கெனவே அதிகாரபூர்வ அங்கீகாரம் பெற்றுள்ளது. இந்தப் பக்கத்தை இதுவரை 2 லட்சம் பேர் ‘லைக்’ செய்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;