இயக்குனர் சுசீந்திரனுக்கு 2வது ஆண் குழந்தை!

இயக்குனர் சுசீந்திரனுக்கு 2வது ஆண் குழந்தை!

செய்திகள் 2-Mar-2015 12:12 PM IST Chandru கருத்துக்கள்

‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் 2009ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சுசீந்திரன். அதன் பிறகு நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, ராஜபாட்டை, ஆதலால் காதல் செய்வீர், பாண்டியநாடு, ஜீவா என இதுவரை 7 படங்களை இயக்கியுள்ளார். தற்போது மீண்டும் விஷாலை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

இயக்குனர் சுசீந்திரனுக்கும் ரேணுகா என்பவருக்கும் திருமணம் முடிந்து, கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு தர்ஷன் என்ற ஆண் குழந்தையும் பிறந்தது. தற்போது இன்று காலை 9.23 மணிக்கு சுசீந்திரன் & ரேணுகா தம்பதிக்கு மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இயக்கம், தயாரிப்பு என தமிழ் சினிமாவில் புதிய உச்சங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இயக்குனர் சுசீந்திரன் மீண்டும் குழந்தை பிறந்துள்ள மகிழ்ச்சியில் சந்தோஷத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார்.

வாழ்த்துக்கள் சுசீந்திரன்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டீசர்


;