35 நாட்களில் 3 படம்!

35 நாட்களில் 3 படம்!

செய்திகள் 2-Mar-2015 9:59 AM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் ரிலீசான ‘கில்லாடி’, ‘சண்டமாருதம்’ படங்களை தொடர்ந்து ஏ.வேங்கடேஷ் இயக்கத்தில் விரைவில் ரிலீசாகவிருக்கும் படம் ‘ரொம்ப நல்லவன்டா நீ’. ‘மிர்ச்சி’ செந்தில், அறிமுகம் ஸ்ருதி பாலா ஜோடியாக நடித்துள்ள இப்படத்தில் சர்வஜித், ஏ.வெங்கடேஷ், ரேகா, ரோபோ சங்கர், ஜான் விஜய், இமான் அண்ணாச்சி, ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி, கனல் கண்ணன், சோனா ஹெய்டன் முதலானோர் நடித்துள்ளனர். இப்படம் குறித்து இயக்குனர் ஏ.வெங்கடேஷ் கூறும்போது,

‘‘ஒரு ஞாயிற்றுக் கிழமை துவங்கி அடுத்த ஞாயிற்றுக் கிழமை இடைவெளியில், அதாவது ஒரு வார காலத்தில் சந்திக்கும் இருவருக்குள் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களே இப்படம்! அதாவது இரண்டு பேர் சந்திக்கும்போது ஒருபோதும் தங்களது தனிப்பட்ட பிரச்சனைகளை மற்றவரிடம் பகிர்ந்துகொள்ளக் கூடாது. அப்படி பகிர்ந்துகொண்டால் அந்த பிரச்சனை மேலும் மேலும் சிக்கலாகி தான் போகும் என்ற கருத்தை வைத்து இப்படத்தை முழு காமெடி படமாக எடுத்திருக்கிறேன்’’ என்றார்.

தீபக் குமார் நாயர், ஷெனாய் மேத்யூ இருவர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்திற்கு மனோ நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராம் சுரேந்தர் இசை அமைத்துள்ளார். விஜய் எடிட்டிங் செய்துள்ளார். இந்த படத்தை இம்மாதம் 6-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு அதற்கான வேலைகளில் பிசியாக இயங்கி வருகின்றனர்.

ஏ.வெங்கடேஷ் இயக்கிய ‘கில்லாடி’ திரைப்படம் சென்ற ஜனவரி 30-ஆம் தேதி வெளியானது. ‘சண்டமாருதம்’ சென்ற மாதம் (ஃபிப்ரவரி) 20-ஆம் தேதி ரிலீசானது. இந்தப் படங்களை தொடர்ந்து வெங்கடேஷ் இயக்கியுள்ள ‘ரொம்ப் நல்லவன்டா நீ’ வருகிற 6-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. ஒரு இயக்குனர் இயக்கிய 3 படங்கள் 35 நாட்களுக்குள் வெளியாவது அரிதான விஷயம்! அந்த சாதனைக்குரிய இயக்குனராகியுள்ளார் ஏ.வெங்கடேஷ்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாஸ்கர் ஒரு ராஸ்கல் - டிரைலர்


;