அறிமுக நாயகனுடன் இனியா நடிக்கும் படம்!

அறிமுக நாயகனுடன் இனியா நடிக்கும் படம்!

செய்திகள் 2-Mar-2015 9:55 AM IST VRC கருத்துக்கள்

‘ஆர்.ஆர்.ராகவேந்திரா ஃபிலிம்ஸ்’ ராமாபுரம் ராஜேஷ் வழங்க ஸ்ரீசினி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘ காதல் சொல்ல நேரமில்லை’. இப்படத்தில் அறிமுகம் உதய்குமார் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக இனியா நடித்துள்ளார். இந்த படத்தின் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கி, தயரித்துள்ளார் ஸ்ரீனிவாசன். இப்பட்த்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று (1-3-15) காலை சென்னையில் நடந்த்து. இந்த விழாவில் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் ‘கலைப்புலி’ எஸ்.தாணு, டி.சிவா, ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்தப் படம் குறித்து இயக்குனர் ஸ்ரீனிவாசன் கூறியதாவது, ‘‘இது ஒரு ஜாலியான கதை! கதாநாயகன் ஒரு பிளேபாய். பார்க்கிற எல்லா பெண்களையும் வசப்படுத்தி விட வேண்டும் என்று நினைப்பவன். உடன்படாத பெண்களையும் தான் வளைத்து விட்டதாக பொய் சொலிக்கொண்டிருப்பான். அந்த பிளேபாய்த்தனம் எப்படியெல்லாம் அவனது வாழ்கையை பாதிக்கிறது என்பதை சுவாரஸ்யமாக சொல்லும் படமே ‘காதல் செய்ய நேரமில்லை’’ என்றார்.
இந்தப் படத்திற்கு குமார் பாண்டியன் இசை அமைத்துள்ளார். சி.எச்.ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். சென்னை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கேரளா போன்ற இடங்களில் படமாகியுள்ள இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புலிவால்


;