எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா ‘காக்கி சட்டை’?

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா ‘காக்கி சட்டை’?

செய்திகள் 28-Feb-2015 12:48 PM IST Chandru கருத்துக்கள்

முன்னணி இடத்தை நோக்கி வேகமாக வளர்ந்துவரும் சூழலில் வெளிவந்திருக்கிறது சிவகார்த்திகேயனின் ‘காக்கி சட்டை’. உலகமெங்கும் 700க்கும் அதிகமான திரையரங்குகளில் நேற்று வெளியாகியிருப்பதாக சொல்லப்படும் இப்படம் ரசிகர்கள், விநியோகஸ்தர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறதா?

டான்ஸ், ஃபைட், காமெடி என தன்னால் முடிந்தளவுக்கு சிவகார்த்திகேயன் இப்படத்தில் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருந்தாலும் அவரின் முந்தைய படங்கள் அளவுக்கு சிறப்பாக இல்லை என்ற கருத்தையே படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பெரும்பாலான ரசிகர்கள் கருத்துத் தெரிவித்தனர். குறிப்பாக, போலீஸ் படத்துக்கே உரிய பரபரப்பும், ஆக்ஷன் காட்சிகளும் முழுமையாக இல்லாமல், சிவகார்த்திகேயனுக்கே உரிய முழுமையான காமெடிப் படமாகவும் இல்லாமல் இருப்பதால் ‘காக்கி சட்டை’ முழுத்திருப்தியைத் தரவில்லை என்ற கருத்து நிலவுகிறது. ஆனால், ‘பார்க்கலாம்... போரடிக்கவில்லை’ என்ற கருத்தையும் பல ரசிகர்கள் சொன்னதையும் கேட்க முடிந்தது. விமர்சனரீதியாக ‘காக்கி சட்டை’க்கு பெரும்பாலான இணையதளங்கள் ‘ஆவரேஜ்’ எனவும், ஒரு சில இணையதளங்கள் நன்றாக இருப்பதாகவும் கருத்துத் தெரிவித்துள்ளன.

பாக்ஸ் ஆபிஸைப் பொறுத்தவரை இப்படம் ஏமாற்றம் அளித்திருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுத்தேர்வு நெருங்குவது, உலக கோப்பை கிரிக்கெட் போன்ற காரணங்களால் இப்படத்திற்கு முதல்நாளான நேற்று தியேட்டர்கள் ஃபுல்லாகவில்லை என்ற ரிப்போர்ட்டே கிடைத்துள்ளது. அதோடு தமிழகமெங்கும் முதல்நாளில் இப்படம் 4 கோடிக்கும் குறைவாக வசூலித்துள்ளதாகவும், உலக அளவில் 7 கோடிக்கும் குறைவாகவே வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சனி, ஞாயிறுகளில் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்தே இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றியா தோல்வியா என்பதை கணிக்க முடியும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'பருத்திவீரன்' தான் நான் சினிமாவிற்கு வர காரணம் - அசோக் செல்வன்


;