வஜ்ரம் – விமர்சனம்

இன்னும் கூர் தீட்டியிருக்கலாம்!

விமர்சனம் 28-Feb-2015 11:52 AM IST Top 10 கருத்துக்கள்

Directed by : S.D.Ramesh Selvan
Produced by : Sri Sairam Film Factory
Starring : Sriram, Kishore, Pandy, Kutty Mani, Thambi Ramayya, Jayaprakash, Bhavani Reddy, Mayil Samy
Music : Fizal
Cinematography : A.R.Kumaresan
Editing : Maris

‘உளவுத்துறை’, ‘ஜனனம்’ போன்ற அதிரடி ஆக்ஷன் படங்களைத் தந்த ரமேஷ் செல்வன் இயக்கியுள்ள படம்! சென்சார் கெடுபிடிகள் காரணமாக ரீ-ஷூட் செய்யப்பட்டு வெளிவந்துள்ள இந்த ‘வஜ்ர’த்தில் என்ன சொல்லியிருக்கிறார் இயக்குனர்?

கதைக்களம்

ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டிமணி ஆகிய நால்வரும் நண்பர்கள். இவர்கள் தன்னுடன் படிக்கும் ஒரு மாணவியை கறபழித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்படுகிறார்கள். அவர்களை சீர்திருத்த வேண்டிய போலீஸ் அதிகாரிகளே அவர்களை மேலும் குற்ற செயல்களில் ஈடுபட வைக்கிறார்கள். ஒரு போலீஸ் அதிகாரிக்காக கல்வித்துறை மந்திரியை கடத்துவதற்கு பதிலாக அவரது மகளை கடத்தி வந்து வனப்பகுதியில் பதுங்குகிறார்கள்! நான்கு சிறுவர்கள் சீர்திருத்தப் பள்ளிக்கு சென்றதன் பின்னணி என்ன? அவர்களிடம் போலீஸ் அதிகாரி கடத்த சொன்ன மந்திரியை கடத்தாமல் அவரது மகளை இவர்கள் கடத்த காரணம் என்ன என்பதற்கு விடை தரும் படமே ‘வஜ்ரம்’.

படம் பற்றிய அலசல்

அதிகார பலத்தை வைத்துக்கொண்டு நிலம் கையகப்படுத்தும் ஒரு அடாவடி மந்திரியின் செயல்களால், சொந்தமாக ஒரு பள்ளிக் கூடத்தை வைத்து நேர்மையான முறையில் கல்வியை போதித்து வரும் ஒரு பெரியவரின் லட்சியம் எப்படி சிதைக்கப்படுகிறது என்பதை இப்படத்தில் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ரமேஷ் செல்வன்! இடைவேளை வரை கொஞ்சம் ஸ்லோவாக பயணிக்கும் திரைக்கதை, சிறுவர்கள் மந்திரி மகளை கடத்தி வந்த்தும் சூடு பிடிக்கிறது. மந்திரியின் பினாமியான போலீஸ் அதிகாரி மந்திரியை கடத்தி வரச் சொன்னதற்கான காரணம், சிறுவர்கள் மந்திரி மகளை கடத்தி வந்ததற்கான காரணம் ஆகியவை ஃப்ளாஷ் பேக் காட்சிகளாக விரியும்போது செம விறுவிறுப்பு! அதிகாரம் படைத்த மந்திரி, அவரது அடியாட்கள், போலீஸ் படை என சுற்றிச் சுற்றி வரும்போது அந்த நான்கு சிறுவர்களை பெரிய ஆக்‌ஷன் ஹீரோக்களைப் போல செயல்பட வைத்திருப்பது கொஞ்சம் ஓவர்! லாஜிக் விஷயங்களை பொருட்படுத்தாமல் பார்த்தால் ரசிக்கும் படியான ஒரு படமே இது! அதற்கு குமரேசனின் ஒளிப்பதிவும், ஃபைசலின் அதிரடி பின்னணி இசையும் மிகவும் ஒத்துழைப்பு கொடுத்துள்ளன.

நடிகர்களின் பங்களிப்பு

‘பசங்க’, ‘கோலிசோடா’ படங்களில் குறும்பு, சேட்டைகள் செய்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டிமணி ஆகிய நால்வர் நடிப்பில் வளர்ந்துள்ளனர். இதில் கல்விக்காக போராடும் இளம் சிங்கங்களாக ஆக்‌ஷன், அதிரடி, பரிதவிப்பு என தங்களுக்கு கொடுத்த கேரக்டர்களை சிறப்பாக செய்துள்ளனர். மந்திரியின் மகளாக வரும் பவானி ரெட்டிக்கு வாய்ப்பு குறைவு என்றாலும் மனதில் நிற்கிறார். மந்திரியாக வரும் ஜெயப்பிரகாஷை விட அவரது மனைவியாக, அழகான வில்லியாக வரும் சனா வில்லத்தன நடிப்பில், ‘அடடே...!’ சொல்ல வைக்கிறார்! கல்வியாளராக வரும் தம்பி ராமையா இப்படத்தில் கொஞ்சம் ஓவரான நடிப்பை வழங்கியிருப்பதை போன்ற உணர்வைத் தருகிறார்!

பலம்

1. விறுவிறுப்பான இரண்டாம் பாதி
2. அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுக்கான குமரேசனின் ஒளிப்பதிவும், ஃபைசலின் பின்னணி இசையும்.
3. கிளைமேக்ஸ்

பலவீனம்

1. இடைவேளை வரை பயணிக்கும் ஸ்லோவான திரைக்கதை
2. சிறுவர்களை வயதுக்கு மீறிய ஆக்‌ஷன் ஹீரோக்களாக காட்டியிருப்பது
3. லாஜிக் மீறல்களும், பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாத்ததும்

மொத்தத்தில்...

நாட்டில் நடக்கும் நிலம் அபகரிப்பையும், கல்வியின் அவசியத்தையும் வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள படம் இது என்பதால் தியேட்டருக்குச் சென்று பார்த்து மகிழலாம்!

ஒரு வரி பஞ்ச் : இன்னும் கூர் தீட்டியிருக்கலாம்!

ரேட்டிங் : 4/10

Key News :

VAJRAM is a Tamil movie, directed by S.D.Ramesh Selvan . PASANGA,GOLISODA Fame actors Kishore, Sree Ram,Pandi, Murugesh acted in this film.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கள்ளப்படம் - டிரைலர்


;