‘எந்திரன்-2’ வை தவிர்த்த ஆமீர்கான்!

‘எந்திரன்-2’ வை தவிர்த்த ஆமீர்கான்!

செய்திகள் 28-Feb-2015 11:12 AM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் ஷங்கர் ‘ஐ’ படத்தை தொடர்ந்து தான் இயக்கிய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவிருக்கிறார் என்றும், இதனை பிரபல ரிலையன்ஸ் நிறுவனம் மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்க இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் வரும் வில்லன் கேரக்டருக்கு பாலிவுட் நடிகர் ஆமீர்கான் பொருத்தமாக இருப்பார் என்று ரஜினி விரும்பியதால், இந்த படம் சம்பந்தமாக ரஜினியும், ஷங்கரும், ஆமீர்கானும் சந்தித்து பேசியிருக்கிறார்கள்! அப்போது ஆமீர் இப்படத்தில் நடிக்க ஓகே சொன்னார் என்றும் கூறப்பட்டது. ஆனால் லேட்டஸ்ட் தகவலின் படி ஆமீர்கான் இப்படத்தில் நடிக்கவில்லையாம்! அவர் ‘எந்திரன் -2’விலிருந்து விலகினார் என்று ஆமீருக்கு நெருங்கிய பாலிவுட் வட்டாரத்தினர் தெரிவித்துள்ளதை வைத்து செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கு காரணமாக கூறப்படுவது ஷங்கர் ‘எந்திரன்’ படத்தை எடுத்து முடிக்க கிட்டத்தட்ட மூன்று வருடக்கால அவகாசம் எடுத்துக் கொண்டார். அப்படியிருக்க, பிரம்மாண்டமான முறையில் எடுக்கவிருக்கும் ‘எந்திரன்-2’வை எடுத்து முடிக்க அதே காலயளவு எடுக்கப்படும் என்பதால் ஆமீர் அடுத்து நடிக்கவிருக்கும் படத்திற்கு கொடுத்திருக்கும் தேதிகள் பாதிக்கப்படும் என்றும், இது தவிர ஆமீரின் எதிர்கால புராஜெக்ட்டுகளும் பாதிக்கப்படும் என்பதாலும் தானாம் இந்த முடிவு! ஆமீரின் நெருங்கிய வட்டாரத்தினரின் அறிவுரைகளின் படியே ஆமீர் இந்த முடிவு எடுத்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - Trailer


;