மார்ச் 1ஆம் தேதியை ‘ஓகே’ செய்த மணிரத்னம்!

மார்ச் 1ஆம் தேதியை ‘ஓகே’ செய்த மணிரத்னம்!

செய்திகள் 28-Feb-2015 10:34 AM IST Chandru கருத்துக்கள்

‘அலைபாயுதே’ படத்திற்குப் பிறகு மணிரத்னத்தின் இயக்கத்தில் பல படங்கள் வந்திருந்தாலும், அவை எதுவும் வசூல்ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில் ‘அலைபாயுதே’ ஸ்டைலில் ஒரு இளமை பொங்கும் காதல் கதையுடன் மீண்டும் களத்தில் குதித்திருக்கிறார் மணிரத்னம். அவரின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘ஓ காதல் கண்மணி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. துல்கர் சல்மான், நித்யாமேனன் நடிக்கும் இப்படத்தில் இசைக்கு ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவுக்கு பி.சி.ஸ்ரீராம் என தனது ஆஸ்தான கூட்டணியுடன் களமிறங்கியிருக்கிறார் மணி.

தற்போது இப்படத்தின் மினி டீஸர் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்துள்ள இந்த டீஸரைத் தொடர்ந்து நாளை (மார்ச் 1) ‘ஓ காதல் கண்மணி’யின் முழுநீள டிரைலர் ஒன்றை வெளியிடவிருக்கிறார்கள். இப்படத்தின் மூலம் மீண்டும் பழைய யூத்ஃபுல் மணிரத்னம் திரும்பி வந்து வெற்றிபெறுவார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காற்று வெளியிடை - படத்தின் சிறு முன்னோட்ட காட்சிகள்


;