டீ கடை பின்னணியில் அஞ்சல!

டீ கடை பின்னணியில் அஞ்சல!

செய்திகள் 27-Feb-2015 12:56 PM IST VRC கருத்துக்கள்

டீ’ கடையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் படம் ’அஞ்சல’. இப்படத்தை இயக்குனர்கள் ரத்னகுமார், மூர்த்தி மற்றும் சக்தி சௌந்தர் ராஜன் ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்த தங்கம் சரவணன் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதிகளில் நடந்துள்ளது. இதில் Yamaha ஷோரூம் வைக்கும் லட்சியத்துடன் உழைக்கும் மெக்கானிக்காக விமல் நடிக்க, கல்லூரி மாணவியாக நந்திதா நடிக்கிறார். மற்றும் பசுபதி, இமான் அண்ணாச்சி, ஆடுகளம்’ முருகதாஸ், சுப்பு பஞ்சு ஆகியோரும் நடிக்கும் இப்படத்தில் ஒரு ‘டீ’ கடை மிக முக்கியமான அங்கம் வகிக்கிறது. முற்றிலும் நகைச்சுவை கலந்த காதல் பொழுது போக்கு பாடமாக இப்படம் உருவாகி வருகிறதாம். இப்படத்தை தனது ‘ஃபார்மர்ஸ் மாஸ்டர் ப்ளான் புரொடக்ஷன்’ என்ற நிறுவனம் சார்பில் திலீப் சுப்புராயன் தயாரிக்கிறார்.

இந்த படம் குறித்து இயக்குனர் தங்கம் சரவணன் கூறும்போது, ‘‘ஒரு நாள் தற்செயலாக ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயனிடம் இந்த கதையை கூறினேன். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே இப்படத்தை தானே தயாரிக்க முன் வந்தார். திலீப் சுப்பராயன் பிரபல சண்டை பயிற்சியாளர்! ஸ்டன்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயனின் மகன். இப்படத்திற்கு சூப்பர் சுப்பராயனே சண்டை பயிற்சியினை மேற்கொண்டுள்ளார். ஒளிப்பதிவாளர்கள் கே.வி.குகன், சௌந்தர் ராஜன் ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்த ரவி கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். மலையாளத்தில் வெற்றி படங்களாக அமைந்த ‘உஸ்தாத் ஹோட்டல்’, ‘பெங்களூர் டேஸ்’ திரைப்படங்களுக்கு இசை அமைத்த கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இவரது இசை படத்துக்கு பக்க பலமாக இருக்கும். ஒவ்வொருவர் வாழ்வில் நடக்கும், நடக்கவிருக்கும் அன்றாட நிகழ்வுகளின் கோர்வையே ‘அஞ்சல’ படம்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அஞ்சல - டிரைலர்


;