2 குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கிறார் ஸ்ரேயா!

2 குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கிறார் ஸ்ரேயா!

செய்திகள் 27-Feb-2015 12:01 PM IST VRC கருத்துக்கள்

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான படம் ‘திருசியம்’. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடத்தை தொடர்ந்து இப்போது ஹிந்தியிலும் ரீ-மேக் ஆகிறது. மலையாளத்தில் மோகன்லால் நடித்த கேரக்டரில் ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிக்கிறார். 2 குழுந்தைகளுக்கு அம்மாவாக மீனா நடித்த கேரக்டரில் ஹிந்தியில் யார் நடிக்கிறார் தெரியுமா! ‘சிவாஜி’ கேர்ல் ஸ்ரேயா தான்! தமிழில் ரஜினி, விஜய், தனுஷ் முதலானோருடன் ஜோடி சேர்ந்து நடித்த ஸ்ரேயாவுக்கு சமீபகாலமாக தமிழில் பட வாய்ப்புகள் இல்லை! இதனால் கன்னடம், தெலுங்கு பக்கம் போன ஸ்ரேயாவுக்கு இப்போது ‘திருசியம்’ ஹிந்தி ரீ-மேக்கில் 2 குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கும் கேரக்டர் கிடைத்துள்ளது. படத்தில் இந்த கேரக்டர் முக்கியமானது என்பதால் தான் அதில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் ஸ்ரேயா! நிஷிகாந்த் என்பவர் இயக்கும் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக தபு நடிக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு கோவா, ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மதுரவீரன் - டீசர்


;