கார்த்திக்கின் ‘அமரன்’ இரண்டாம் பாகம்!

கார்த்திக்கின் ‘அமரன்’ இரண்டாம் பாகம்!

செய்திகள் 27-Feb-2015 11:09 AM IST VRC கருத்துக்கள்

கார்த்திக் நடிப்பில் 1992-ல் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘அமரன்’. ராஜேஷ்வர் இயக்கியிருந்த இப்படத்தில் கார்த்திக் தாதா கேரக்டரில் நடித்திருந்தார். அத்துடன் இப்படத்திற்காக கார்த்திக் பாடிய ‘வெத்தல போட்ட…’ பாடலும் அப்போது சூப்பர் ஹிட்டானது! சமீபத்தில் வெளியான ‘அனேகன்’ படத்தில் கார்த்திக் வில்லனாக நடித்திருக்கிறார். இந்த கேரக்டர் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு பெற்றிருப்பதால் இதுபோன்ற வேடங்களில் தொடர்ந்து நடிக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறாராம் கார்த்திக்! இதனால் தான் தாதா கேரக்டரில் நடித்த ‘அமரன்’ படத்தின் தொடர்ச்சியாக ‘அமரன்-2’ படத்தை எடுக்கவும் திட்டமிட்டுள்ளாராம் கார்த்திக்! இது சம்பந்தமாக கார்த்திக்க்கும் ‘அமரன்’ படத்தை இயக்கிய ராஜேஷ்வரும் இடையில் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படம் சம்பந்தமான அறிவிப்பு வரும் என்று சொல்கிறார்கள்! ராஜேஷ்வர் இயக்கிய ‘இதயத்தாமரை’ என்ற படத்திலும் கார்த்திக் தான் ஹீரோவாக நடித்திருந்தார். அந்த காலகட்டத்தில் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னை 28 2 வது இன்னிங்ஸ்


;