ராதா மோகன் படத்தில் கௌதம் மேனன்!

ராதா மோகன் படத்தில் கௌதம் மேனன்!

செய்திகள் 27-Feb-2015 10:29 AM IST VRC கருத்துக்கள்

நிறைய வெற்றிப் படங்களை இயக்கியுள்ள கௌதம் மேனன் சிறந்த ஒரு பாடகரும் கூடவாம்! ஆனால் இந்த விஷயம் நிறைய பேருக்கு தெரியாதாம்! ‘என்னை அறிந்தால்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு நடிக்கும் படத்தின் வேலைகளில் படு உற்சாகத்தோடு பணிபுரிந்து வரும் கௌதம் மேனனை தனது ‘உப்புக் கருவாடு’ படத்திற்காக ஒரு பாடலை பாட வைத்துள்ளார் இயக்குனர் ராதா மோகன்! இந்த படத்திற்கு ஸ்டீவ் வத்ஸ் என்ற புதுமுகம் இசை அமைக்கிறார். இவரது இசையில் பாடியுள்ளார் கௌதம் மேனன்! இது குறித்து இயக்குனர் ராதா மோகன் கூறியிருப்பது, ‘‘கௌதம் மேனன் எனது நெருங்கிய நண்பர்! பார்ட்டிகளில் எல்லாம் அவர் பாடுவதை நான் பார்த்திருக்கிறேன்! ‘உப்புக் கருவாடு’க்கு இசை அமைக்கும் ஸ்டீவ் வத்ஸ் கௌதம் மேனனுக்கும் நல்ல நண்பர்! அதனால் நாங்க இரண்டு பேரும் சேர்ந்து கௌதம் மேனனை பாட வைக்கலாம் என்று முடிவு செய்தோம். அவரும் மகிழ்ச்சியுடன் பாடலை பாடி கொடுத்துள்ளார். அவர் பாடிய பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார். அந்த பாடல் சூப்பராக வந்துள்ளது’’ என்று கூறியுள்ளார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;