‘காக்கி சட்டை’யின் மலைக்க வைக்கும் தியேட்டர் எண்ணிக்கை!

‘காக்கி சட்டை’யின் மலைக்க வைக்கும் தியேட்டர் எண்ணிக்கை!

செய்திகள் 26-Feb-2015 3:03 PM IST Chandru கருத்துக்கள்

ஒவ்வொரு படத்திலும் அடுத்தடுத்த கட்டத்திற்கு தெளிவாகப் பயணித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். காமெடியனாக அறிமுகமாகி, காமெடி நாயகனாக உருவெடுத்து, நாயகனாக பயணித்து, மாஸ் ஹீரோவுக்கான இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார். நாளை வெளியாகவிருக்கும் ‘காக்கி சட்டை’ படத்தின் மூலம் ஆக்ஷன் அவதாரமும் எடுக்கிறார் சிவகார்த்திகேயன்.

முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக ‘காக்கி சட்டை’க்கு தியேட்டர் ஒதுக்கப்படிருப்பதாக வந்திருக்கும் தகவல்கள் அவரின் ரசிகர்களை மட்டுமின்றி, மொத்த சினிமா ரசிகர்களையும் மலைக்க வைக்கிறது. கடைசியாக வெளிவந்த ‘மான் கராத்தே’ படம் உலகமெங்கும் 500க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ‘காக்கி சட்டை’ அதனையும் மிஞ்சி 700க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளிவரவிருக்கிறது. தமிழகத்தில் 400க்கும் அதிகமான திரையரங்குகளிலும், கேரளாவில் 60க்கும் அதிகமான திரையரங்குகளிலும், கர்நாடகாவில் 40க்கும் அதிகமான திரையரங்குகளிலும், இந்தியாவின் மற்ற இடங்களில் 30க்கும் அதிகமான திரையரங்குகளிலும், வெளிநாடுகளில் 200க்கும் அதிகமான திரையரங்குகளிலும் சிவகார்த்திகேயனின் ‘காக்கி சட்டை’ வெளிவரவிருக்கிறதாம்.

இந்த வருடம் வெளிவந்த படங்களில் ஐ, என்னை அறிந்தால், அனேகன் படங்களுக்கு அடுத்து சிவகார்த்திகேயனின் ‘காக்கி சட்டை’யும் பெரிய அளவில் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் முதல் நாள் வசூலில் தனது முந்தைய பட சாதனைகளை சிவகார்த்திகேயன் முறியடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கிலி புங்கிலி கதவ தொற - டிரைலர்


;