சிவகார்த்திகேயனுக்கு பிடித்த நடிகர் அஜித்தா? விஜய்யா?

சிவகார்த்திகேயனுக்கு பிடித்த நடிகர் அஜித்தா? விஜய்யா?

செய்திகள் 26-Feb-2015 11:30 AM IST Chandru கருத்துக்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை உலகமெங்கும் வெளிவரவிருக்கிறது ‘காக்கி சட்டை’. ‘எதிர்நீச்சல்’ டீமின் கூட்டணியில் உருவாகியிருக்கும் இப்படத்தின் டிரைலர் கடந்த மாதம் வெளியானது. இந்த டிரைலரில் நடிகர் சிவகார்த்திகேயன், ‘‘தல ஸ்டைல்ல சொல்லணும்னா.... இட்ஸ் ஜஸ்ட் எ பிகினிங்’’ என வசனம் பேசியிருப்பார். இந்த வசனத்திற்கு அஜித் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதோடு இந்த டிலைரும் யு டியூப்பில் 25 லட்சம் முறை கண்டுகளிக்கப்பட்டுள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் அஜித்தின் தீவிர ரசிகர் என்றொரு பேச்சு சமூக வலைதளங்களில் நிலவியது. இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கருத்துத் தெரிவித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

‘‘கட்அவுட், பாலாபிஷேகம்லாம் பண்ற அளவுக்கு நான் யாரோட மிகப்பெரிய ரசிகன், வெறியன் அப்படின்னு சொல்லணும்னா அது ரஜினி சாரைத்தான் சொல்லுவேன். அதுக்கப்புறம் எனக்கு அஜித் சார், விஜய் சார் ரெண்டு பேரையுமே ரொம்பவும் பிடிக்கும். எந்தவிதமான பேக்ரவுண்ட்டும் இல்லாம தன்னம்பிக்கையோட அஜித் சார் ஜெயிச்சார்னா, ஒரு வாய்ப்புக் கிடைச்சா அதை எப்படி பயன்படுத்தி முன்னேறணும்னு விஜய் சார் காட்டிட்டார். அதோடு இவங்க ரெண்டு பேருமே இத்தனை உயரத்துக்கு வந்ததுக்கப்புறமும் நேர்ல சந்திச்சோம்னா எந்தவித பந்தாவும் இல்லாம ரொம்ப சாதாரணமா இருப்பாங்க. இதுனாலயே நான் இவங்களோடு ரசிகனா மாறிட்டேன். அதோடு எனக்கு இவங்க பெரிய ரோல் மாடலும் கூட. ‘காக்கி சட்டை’ படத்துல அஜித் சார் டயலாக் மட்டுமில்ல... விஜய் சார் டயலாக்கும் இருக்கு!’’ என்று அந்த பேட்டியில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;