’லிங்கா’ பிரச்சனை தீர்த்து வைக்கிறார் சரத்குமார்!

’லிங்கா’ பிரச்சனை தீர்த்து வைக்கிறார் சரத்குமார்!

செய்திகள் 26-Feb-2015 10:57 AM IST VRC கருத்துக்கள்

‘ரஜினியின் ‘லிங்கா’ பட விநியோகஸ்தர்கள் பிரச்சனை மனிதாபிமான அடிப்படையில் இன்று பேசி தீர்க்கப்படும்’ என்று நடிகர் சங்க தலைவரும், நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார். சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்து சமீபத்தில் வெளியான ‘சண்டமாருதம்’ படம் வெற்றிப் பெற்றுள்ளதையொட்டி அவர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசும்போது,

‘‘ரஜினிகாந்த நடித்த ‘லிங்கா’ படப் பிரச்சனை தொடர்பாக ஏற்கெனவே நடிகர் சங்கத்தின் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் ‘ஒரு தொழில் என்று எடுத்துக் கொண்டால் லாபமும், நஷ்டமும் வரும். லாபம் வரும்போது திருப்பிக் கொடுக்காதவர்கள் நஷ்டஈடு மட்டும் கேட்பது தொழில் தர்மம் ஆகாது’ என்று குறிப்பிட்டிருந்தோம். இந்த பிரச்சனையில் மனிதாபிமான அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட தொகையை விநியோகஸ்தர்களுக்கு நஷ்ட ஈடாக கொடுத்து சுமுகமாக பேசி முடித்துவிடலாம் என்று ‘லிங்கா’ படத்தின் தயாரிப்பாளர் ‘ராக்லைன்’ வெங்கடேஷிடம், ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டார். அதை தொடர்ந்து நானும் ‘ராக்லைன்’ வெங்கடேஷ் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்தவர்களும் ‘லிங்கா’ படப் பிரச்சனை தொடர்பாக விநியோகஸ்தர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். இன்று ‘லிங்கா’ பிரச்சனை பேசி தீர்க்கப்படும் என்று நம்புகிறோம்’’ என்றார்! இதனால் கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வந்த ‘லிங்கா’ பிரச்சனை ஒரு முடிவுக்கு வர இருக்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;