இஷா தல்வரின் ஃபேவரிட் நடிகை நயன்தாரா!

இஷா தல்வரின் ஃபேவரிட் நடிகை நயன்தாரா!

செய்திகள் 26-Feb-2015 10:34 AM IST VRC கருத்துக்கள்

அழகான நடிகைகளுக்கு ரசிகர்கள் இருப்பது வழக்கம்! ஆனால் சினிமாவில் இருக்கும் ஒரு அழகான நடிகைக்கு அந்த சினிமாவிலேயே இருக்கும் மற்றொரு நடிகை ரசிகையாக இருப்பது அபூர்வமான விஷயம்! அந்த விஷயத்தில் நடிகை நயன்தாராவுக்கு தென்னிந்திய சினிமாவில் நிறைய ரசிகர்களும், ரசிகைகளும் இருக்கிறார்கள்! இதனால் நயன்தாரா பெரும் அதிர்ஷ்டகார நடிகை என்று சொல்லலாம்! நயன்தாராவை விரும்பும் நடிகைகளில் இஷா தல்வரும் ஒருவர்! சமீபத்தில், நயன்தாரா தற்போது நடித்து வரும் மலையாள படமான ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடந்தது. இதை கேள்விப்பட்ட இஷா தல்வர், அந்த படப்பிடிப்பு தளத்திற்கு சென்று நயன்தாராவை சந்தித்து, உரையாடி அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டு திரும்பியிருக்கிறார்! அத்துடன் அவர் இந்த மகிழ்ச்சியை தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்து கொள்ள தவறவில்லை!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அறம் - டிரைலர்


;